சி.வி.சண்முகம் ஆதரவு விஜய்க்கு தேவையில்லை! கார்த்தி சிதம்பரம் எம்.பி அதிரடி!
சி.வி.சண்முகம் தரப்பு அ.தி.மு.க எம்.எல்.ஏ-களின் ஆதரவு இல்லாமலே விஜயால் 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை தர முடியும் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கார்த்தி சிதம்பரம் அவர்கள் தற்போதைய அரசியல் சூழல் குறித்து முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றுள்ள சூழலில், முதலமைச்சர் விஜய் குறித்து கார்த்தி சிதம்பரம் கூறியதாவது முதலமைச்சர் விஜயால் தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு நிலையான ஆட்சியைத் தர முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அதிமுகவிலிருந்து பிரிந்து தவெக அரசுக்கு ஆதரவளித்த சி.வி. சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு விஜய்க்குத் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தவெக-வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மற்றும் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் போதிய பலம் இருப்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக அவரது பேச்சு அமைந்துள்ளது.
இதையும் படிங்க: எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!
சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் விஜய் அரசு வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஒரு தரப்பினர் ஆதரவளித்த நிலையில், அந்த ஆதரவு இல்லாமலேயே விஜயால் திறம்பட ஆட்சி நடத்த முடியும் என கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுகவில் சி.வி. சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்பட்டு, அவர்கள் இபிஎஸ்-க்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள சூழலில், கார்த்தி சிதம்பரத்தின் இந்தத் தவெக ஆதரவு நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிங்க: திமுக ஒரு தீய சக்தி.. 76% மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி! புள்ளிவிவரங்களுடன் விளாசிய முதல்வர் விஜய்!