×
 

கரூர் அரசு பணி ரத்து விவகாரம்: நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கான அரசு பணி நியமன அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் வழங்கப்பட்ட கருணை அடிப்படையிலான அரசுப் பணிகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நாளை (ஜூலை 28) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

கரூரில் நடைபெற்ற நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிவாரண உதவியாக அரசுப் பணி நியமன ஆணைகளை மாநில அரசு வழங்கியிருந்தது. எனினும், இந்த நியமனங்களை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் தீர்ப்பளித்தது.

இதையும் படிங்க: "காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் புதிய நியமனம்" - அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் சேர்ப்பு!

இந்த உத்தரவு குறித்துச் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரூர் விவகாரத்தில் அரசுப் பணி நியமன ஆணை பெற்ற நபர்களை நீதிமன்ற வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கவில்லை. பணி நியமனம் பெற்றவர்களின் நியாயமான வாதங்களைக் கேட்டறியாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், நாளை காலை டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் 16 பேரையும் சுட்டாரா? ஸ்டெர்லைட் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share