காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்..! 3 வீரர்கள் உயிரிழந்த சோகம்..!
ஜம்மு-காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனம் 700 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது. சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்த இந்த சம்பவத்தில் மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பட்ரேரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தினர், காவல்துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்ட நிலையில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் போர்? பிரதமருடன் முப்படை தளபதி முக்கிய ஆலோசனை..!
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் 48 சுற்றுலாத் தளங்கள் மூடல்..!