அதிர்ச்சி..! காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்.. சமூக ஆர்வலர் கொடூர மரணம்..!
பயங்கரவாதிகள் சமூக ஆர்வலரை ஏன் குறிவைத்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.
ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் அதன் கொடூர நடவடிக்கைகளில் நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கவில்லை. ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இன்று சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 45 வயது சமூக ஆர்வலர் ஒருவர் காயமடைந்தார். அதன் பிறகு அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
சனிக்கிழமை இரவு கண்டி காஸில் உள்ள அவரது இல்லத்திற்குள் சமூக ஆர்வலர் குலாம் ரசூல் மாக்ரே மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் குலாம் ரசூல் மாக்ரே காயமடைந்ததாகவும், அதன் பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்ததாகவும் அவர் கூறினர். ஆனாலும் பயங்கரவாதிகள் சமூக ஆர்வலரை ஏன் குறிவைத்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.
இதையும் படிங்க: நாங்க அணு ஆயுத நாடு..எதுக்கும் பயப்பட மாட்டோம்.. பாகிஸ்தான் துணை பிரதமர் திமிர் பேச்சு.!
கடந்த 22 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஒரு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பிறகு, ஒருபுறம் விசா ரத்து செய்யப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. மறுபுறம், பல பயங்கரவாதிகளின் வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீரில் அதிகாரிகள் தீவிரவாதிகள், அவர்களது ஆதரவாளர்களுக்கு எதிராக ஒடுக்குமுறையைத் தொடங்கியுள்ளனர். தீவிரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டன. மறைவிடங்கள் சோதனை செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 48 மணி நேரத்திற்குள், பயங்கரவாதிகள், அவர்களது கூட்டாளிகளின் ஆறு வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றவர்களுக்கு எதிராகவும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதிகாரிகளின் தகவல்படி, இடிக்கப்பட்ட வீடுகளில் புல்வாமாவைச் சேர்ந்த அஹ்சன் உல் ஹக்கின் வீடும் அடக்கம். அவர் 2018-ல் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று சமீபத்தில் பள்ளத்தாக்கிற்குள் ஊடுருவினார். ஷோபியானைச் சேர்ந்த மூத்த லஷ்கர்-இ-தொய்பா தளபதியான ஷாஹித் அகமது குட்டாய், பல ஆண்டுகளாக தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார். குல்காமைச் சேர்ந்த ஜாகிர் அகமது கானி பயங்கரவாத தொடர்புகள் இருப்பதாகக் கூறி 2023 முதல் கண்காணிப்பில் உள்ளார். இவர்களது வீடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குப்வாராவின் கலரூஸ் பகுதியில் உள்ள ஃபரூக் அகமது டெட்வா, மிஸ்கின் அகமது டெட்வா ஆகியோரின் வீடுகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், இந்திய ராணுவம் உஷார் நிலையில் உள்ளது. பாகிஸ்தானால் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்.. ஸ்கெட்ச் போட்ட லஷ்கர்.. உளவுத்துறை பகீர் எச்சரிக்கை..!