×
 

சபாநாயகர் யார்..? முதல்வர் விஜய் முன்னிலையில் மனு கொடுத்த ஜே.சி.டி பிரபாகர்..!!

சட்டப்பேரவை தலைவர் பதவிக்காக போட்டியிட ஜே.சி டி பிரபாகர் மனு கொடுத்தார்.

தமிழக அரசியலில் பல தசாப்த கால அனுபவம் கொண்ட மூத்த தலைவர்களில் ஒருவரான ஜே.சி.டி. பிரபாகர், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கான போட்டியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இந்த மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு தவெகவின் புதிய ஆட்சியில் அனுபவம் மிக்க தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை பிரதிபலிக்கிறது. ஜே.சி.டி. பிரபாகர் ஒரு மூத்த அரசியல்வாதி. அவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். 1980-களில் வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற அவர், 2011-ல் சென்னை தொகுதியில் இருந்து மீண்டும் வெற்றி பெற்று அனுபவத்தை நிரூபித்தார்.

அதிமுகவில் இருந்து பின்னர் விலகி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக அறியப்பட்ட அவர், 2026 ஜனவரியில் தவெகவில் இணைந்தார். தளபதி விஜய் முன்னிலையில் இணைந்த இந்த நிகழ்வு அப்போது பெரும் கவனத்தை ஈர்த்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தவெக வேட்பாளராக களமிறங்கிய பிரபாகர், தீவிர பிரச்சாரத்தின் மூலம் 58,965 வாக்குகள் பெற்று 15,141 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இதையும் படிங்க: தவெக ஆட்சியைப் பிடிச்சாச்சு..! முதல்வர் விஜய் வைகோவை சிந்திக்க திட்டம்..!

சட்டப்பேரவை தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே சி டி பிரபாகர் மனுக் கொடுத்தார். தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மனு அளித்தார்.

இதையும் படிங்க: ஆண்டவன் மீது ஆணையாக..! விஜயை பார்த்து உறுதிமொழி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share