பாலியல் புகார்! கேரள நடிகையால் நேர்ந்த கொடூரம்.. சென்னைக்கு அழைத்து வரும் போலீஸ்..!
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கேரள நடிகை மினு முனீர் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கேரள நடிகை மினு முனிர் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.
மலையாளத் திரையுலகில் நடிகையாக அறியப்பட்ட மினு முனீர், தனது திரைப் பயணத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர். அவரது திரை வாழ்க்கை, சவால்கள் மற்றும் சர்ச்சைகளால் நிறைந்ததாக இருந்தாலும், அவரது பங்களிப்பு மற்றும் அனுபவங்கள் மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்கவை.
மினு முனீர் மலையாளத் தொலைக்காட்சித் தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். அவரது திரைப் பயணம், குறிப்பாக 2013-ஆம் ஆண்டு நடந்த சில சம்பவங்களால், பெரும் திருப்புமுனையைச் சந்தித்தது.
மினு முனீர் மலையாள சினிமாவில் நடிகையாக பணியாற்றிய காலத்தில், "தே இங்கோட்டு நோக்கியே" மற்றும் "காலண்டர்" போன்ற படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: பஸ் டயரில் சட்டென பாய்ந்த இளைஞர்...கேரளாவில் ஓர் அதிர்ச்சி சம்பவம்
இந்த நிலையில், பாலியல் புகாரில் கேரள நடிகை மினு முனிர் சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த 14 வயது சிறுமியை சின்னத்திரையில் நடிக்க வைப்பதாக கூறி மினு முனீர் அழைத்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சிறுமி தங்கிய இடத்தில் அவரிடம் நான்கு பேர் அத்துமீறியதாக புகார் எழுந்துள்ளது. இதன் பேரில் மினு முனீர் கேரளாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடம் சென்னை என்பதால் வழக்கு சென்னை திருமங்கலம் போலீஸாருக்கு மாற்றிவிடப்பட்டது. அதன் பேரில் நநடிகை மினு முனீரை சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மக்களே ஜாக்கிரதை..!! கேரளாவில் வெளுக்கப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!