×
 

கேரளாவில் BLO விபரீத முடிவு!! SIR பணி புறக்கணிப்பு!! மார்க்சிஸ்ட் மிரட்டுவதாக காங், பாஜ பகீர் புகார்!!

எஸ்ஐஆர் பணிகளின்போது அனீஸ் ஜார்ஜை மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மிரட்டினர். அதனால்தான் அவர் தற்கொலை செய்தார் என காங்கிரஸ் கூட்டணியும், பாஜவும் குற்றம்சாட்டின.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் (SSR) ஏற்பட்ட பணிச்சுமை மற்றும் அதிகாரிகள் அழுத்தத்தால் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் எட்டுக்குடுக்கா பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஊழியர் அனீஸ் ஜார்ஜ் (41) நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இச்சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாநிலம் தழுவிய அளவில் BLO எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பெரும்பாலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பய்யனூர் அரசுப் பள்ளியில் அட்டென்டராகப் பணியாற்றிய அனீஸ் ஜார்ஜ், தனது வாக்குச்சாவடி எல்லைக்குட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் SSR படிவங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

இதையும் படிங்க: வலுக்கும் எதிர்ப்பு... கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்... SIR - க்கு எதிராக கண்டன முழக்கம்...!

இரவு பகலாக வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கியும், கெடு முடிவதற்கு முன்பே அனைத்து வாக்காளர்களையும் சென்றடைய முடியவில்லை என்ற கவலையில் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அனீஸ் ஜார்ஜின் தந்தை கண்ணீருடன் கூறுகையில், “நள்ளிரவு வரை படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டான். கடும் பணிச்சுமையால் மன அழுத்தத்தில் இருந்தான். ஆனால் இப்படியொரு விபரீத முடிவு எடுப்பான் என்று நினைக்கவில்லை” என்றார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கேரளா முழுவதும் ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. “அனீஸ் ஜார்ஜின் மரணத்திற்கு தேர்தல் ஆணையமும் அதிகாரிகளும் தான் பொறுப்பு” என்று போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். 

கண்ணூர் கலெக்டர் அருண் கே. விஜயன், “அனீஸ் ஜார்ஜ் பணியைத் திறம்பட செய்து வந்தார். மரணத்திற்கு பணிச்சுமை காரணமாக இருக்காது” என்று கூறியது ஆசிரியர்கள், ஊழியர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் அரசியல் பிரச்சினையாகவும் மாறியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பில், “எஸ்எஸ்ஆர் பணியின்போது மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அனீஸை மிரட்டியதால் தான் தற்கொலை செய்து கொண்டார்” என்று குற்றம்சாட்டப்பட்டது. இதை மார்க்சிஸ்ட் கட்சி மாநிலத் தலைமை முற்றிலும் மறுத்துள்ளது. “அரசு ஊழியர் தற்கொலையிலும் காங்கிரஸ்-பாஜக ஆதாயம் தேட முயல்கின்றன” என்று மார்க்சிஸ்ட் பதிலடி கொடுத்துள்ளது.

கேரளாவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட BLOக்கள் SSR பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் தரப்பில் “பணிச்சுமையைக் குறைக்க வேண்டும், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

இதையும் படிங்க: தீயில் கருகிய பஸ்! எங்களை உடனே சவுதிக்கு அனுப்புங்க!!! விபத்தில் 7 பேரை இழந்த உறவினர்கள் கதறல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share