8 இன்ஜினியரிங் மாணவர்கள் உயிரை காவு வாங்கிய கோரம்... வெளியானது விபத்துக்கான அதிர்ச்சி காரணம்...!
நெடுஞ்சாலையில் மகாராஷ்டிரா மாநிலப் பதிவு எண்ணைக் கொண்ட சரக்கு லாரி முறையாக நிறுத்தப்பட்டிருந்ததா என்பதும் போலீசாரின் விசாரணையில் இடம்பெற்றுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எட்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கைப்பமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 66-ல், நள்ளிரவு 11 மணியளவில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த எட்டு கல்லூரி மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, போலீசார் காரின் பதிவு எண்ணைச் சோதனை செய்தபோது, அது மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம் என்பது தெரியவந்துள்ளது. மேலும், காரில் ஒரு மாணவரின் அடையாள அட்டை இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING அதிகாலையில் கோர விபத்து... கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேர் துடிதுடித்து பலி... காரை வெட்டி எடுக்கப்பட்ட உடல்கள்...!
இதன் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான விஸ்வா, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான சூர்யா, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான சந்தோஷ் மற்றும் பிரசன்னா, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான யுவ சஞ்சீத் உள்ளிட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
மாணவர்களின் உடல்கள் தற்போது திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணியளவில் பிரேதப் பரிசோதனை நடைபெற உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன. குறிப்பாக, சாலையில் வாகனம் திரும்புவது குறித்து எச்சரிக்கை பலகை சரியான இடத்தில் வைக்கப்பட்டிருந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல், மேம்பாலத்தில் இருந்து வாகனங்கள் இறங்கியவுடன் சாலை திரும்பும் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 500 மீட்டர் முன்னதாகவே தடுப்பு மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், நெடுஞ்சாலையில் மகாராஷ்டிரா மாநிலப் பதிவு எண்ணைக் கொண்ட சரக்கு லாரி முறையாக நிறுத்தப்பட்டிருந்ததா என்பதும் போலீசாரின் விசாரணையில் இடம்பெற்றுள்ளது.
நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது கார் பயங்கரமாக மோதியதால், கார் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது. அப்பளம் போல் நொறுங்கிய காரின் பாகங்களை, உள்ளூர் மக்களின் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றி, மாணவர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட எட்டு மாணவர்களின் உடல்களும் தற்போது திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணியளவில் உடற்கூறாய்வு நடைபெற உள்ளது.
விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை முந்திய புதுச்சேரி! பள்ளிக் கல்வி தரவரிசையில் வெளியான அதிர்ச்சி ரேங்க்! முழு விவரம்!