×
 

நேதாஜி பயந்து ஓடுனாரா? கேரளா பாடநூலில் வரலாற்று பிழை!! கொந்தளிக்கும் மக்கள்..!!

கேரளாவில் பள்ளிப் பாடநூல் வரைவில், சுபாஷ் சந்திர போஸ் பிரிட்டிஷாருக்கு பயந்து ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார் என்று கூறப்பட்டுள்ளது. இது சர்ச்சையான நிலையில், வரலாற்றுப் பிழைகள் சரிசெய்யப்பட்டு விட்டதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

கேரளாவில் ஒரு பெரிய சர்ச்சை வெடிச்சிருக்கு! நம்ம நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிரிட்டிஷாருக்கு பயந்து ஜெர்மனிக்கு ஓடிப்போயிட்டார்னு, 4-ம் வகுப்பு ஆசிரியர் கையேட்டில் (Teachers’ Handbook) எழுதியிருந்தது பெரிய புயலை கிளப்பியிருக்கு.

இந்த தவறை கண்டுபிடிச்ச ஆசிரியர்கள், உடனே இதை கேரள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) கவனத்துக்கு கொண்டு வந்ததும், இப்போ அந்த பிழையை சரி செஞ்சுட்டதா மாநில அரசு சொல்லுது. இந்த தவறுக்கு காரணமான பாடநூல் குழு உறுப்பினர்களை கல்வி நடவடிக்கைகளில் இருந்து தடை செஞ்சிருக்காங்க. 

இந்த சம்பவம், 4-ம் வகுப்பு சுற்றுச்சூழல் பாட ஆசிரியர் கையேட்டில் இருந்து ஆரம்பிச்சது. இந்த கையேடு, ஆசிரியர்களுக்கு வழிகாட்டுறதுக்காக SCERT தயாரிச்சது. அதுல, “நேதாஜி, காங்கிரஸ் தலைவரா இருந்தவர், பின்னாடி ராஜினாமா செஞ்சு ஃபார்வர்டு பிளாக் கட்சியை ஆரம்பிச்சார். பிரிட்டிஷாருக்கு பயந்து ஜெர்மனிக்கு தப்பி ஓடினார், பிறகு இந்திய தேசிய ராணுவத்தை (INA) உருவாக்கி பிரிட்டிஷாருக்கு எதிரா போராடினார்”னு எழுதியிருந்தது. 

இதையும் படிங்க: தொடரும் தொழில்நுட்ப கோளாறு.. அவசர தரையிறக்கம்! F-35 விமானம் வாங்குவதை தவிர்க்கும் உலக நாடுகள்..!

இந்த “பயந்து தப்பி ஓடினார்”னு சொன்னது, நேதாஜியோட தைரியமான பிம்பத்தை கெடுக்கற மாதிரி இருந்ததால, ஆசிரியர்கள் உடனே இதை எதிர்த்து குரல் கொடுத்தாங்க. RSS-ஓட மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) இதை “நேதாஜியை அவமானப்படுத்தற முயற்சி”னு சொல்லி, கேரள அரசு மீது குற்றச்சாட்டு வைச்சது. மேலும், இதே பாடநூலில் இந்திய வரைபடத்தில் அசாம், ஜார்க்கண்ட் மாநிலங்களோட பெயர்கள் இடம்பெறாம இருந்ததும் பெரிய சர்ச்சையை கிளப்பியது.

கேரள கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, இந்த தவறு கவனத்துக்கு வந்த உடனே, SCERT-க்கு உத்தரவு போட்டு, “பயந்து தப்பி ஓடினார்”னு இருந்த வரியை நீக்கி, சரியான வரலாற்று உண்மைகளை சேர்க்க சொல்லியிருக்காரு. இப்போ புதுப்பிக்கப்பட்ட கையேடு SCERT வலைதளத்தில் வெளியாகியிருக்கு. 

அமைச்சர், “நம்ம மாநில அரசு, மத்திய அரசு மாதிரி வரலாற்றை அரசியல் நோக்கத்தோடு திரிக்கறதை ஆதரிக்காது. உண்மையான வரலாற்றை மட்டுமே மாணவர்களுக்கு கற்பிப்போம்”னு X-ல ஒரு பதிவு போட்டு தெளிவுபடுத்தியிருக்காரு. இந்த தவறுக்கு காரணமான குழு உறுப்பினர்கள் இனி எந்த கல்வி பணிகளிலும் ஈடுபட முடியாதுன்னு தடை விதிக்கப்பட்டிருக்கு.

இந்த சம்பவம், கேரளாவில் மட்டுமில்ல, இந்தியா முழுக்க பேசு பொருளாச்சு. ABVP, இதை “தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான சதி”னு சொல்லி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதி, விசாரணைக்கு வலியுறுத்தியிருக்கு. இதோட, பாடநூலில் வேற சில தவறுகளையும் சுட்டிக்காட்டியிருக்காங்க. 

உதாரணமா, இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவரா சரோஜினி நாயுடு சொல்லப்பட்டிருக்கு, ஆனா உண்மையில் அது ஆனி பெசன்ட். இதே மாதிரி, இந்திய தேசிய ராணுவத்தை (INA) நேதாஜி தொடங்கினார்னு சொல்லியிருக்கு, ஆனா அதை முதலில் தொடங்கியவர் கேப்டன் மோகன் சிங், பின்னர் நேதாஜி அதை மறுசீரமைப்பு செய்து வலுப்படுத்தினாரு.

நேதாஜி, பிரிட்டிஷாருக்கு எதிரா தைரியமா போராடி, இந்திய சுதந்திரத்துக்கு ஜெர்மனி, ஜப்பானோட கூட்டு சேர்ந்து INA-வை வழிநடத்தியவர். அவரை “பயந்து ஓடினார்”னு சொன்னது, அவரோட தியாகத்தையும், தைரியத்தையும் கேள்விக்குறியாக்கற மாதிரி இருக்கு. இந்த தவறு, கல்வி பாடநூல்களில் தரமான மறு ஆய்வு (Quality Control) இல்லைனு காட்டுது. இப்போ SCERT, இனி இதுமாதிரி தவறுகள் வராம இருக்க கடுமையான மறு ஆய்வு செய்யும்னு உறுதி கொடுத்திருக்கு.

இதையும் படிங்க: காணவில்லை!! காங்., எம்.பி பிரியங்கா காந்தி மிஸ்ஸிங்!! வயநாடு எஸ்.பி-யிடம் புகார் கொடுத்த பாஜக!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share