×
 
☰

கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

அக்டோபர் 7 மற்றும் 8-ம் தேதிகளிலும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து இன்று 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி இன்று, அக்டோபர் 5-ம் தேதி பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை அக்டோபர் 6-ம் தேதி இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 64.5 மி.மீ. முதல் 115.5 மி.மீ. வரை மழை பதிவாகும் சூழ்நிலையே கனமழையாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!

மேலும், கேரளாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 7 மற்றும் 8-ம் தேதிகளிலும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக மலைப்பகுதிகளில் சாலைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு, மண் சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக மோசமான வானிலை நிலவும் நேரங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது பாதுகாப்பானது.

இதற்கிடையே, கேரளாவில் மழை தொடர்பான வானிலை எச்சரிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எனவே, மலைப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளூர் நிர்வாகம் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை கவனித்து பயணத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share