×
 

அச்சா... அம்மே...இருட்டில் அலறிய சிறுமி! சட்டென ஓடிய காம மிருகங்கள்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தனியாக நடந்து சென்ற சிறுமியிடம் இரண்டு பேர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபகாலமாக சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெண் குழந்தை பெற்றவர்களை கதி கலங்கச் செய்து வருகிறது. இதனிடையே கோழிக்கோட்டில் நடந்துள்ள ஒரு சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தனியாக நடந்து சென்ற சிறுமியிடம் இரண்டு பேர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். 

டியூஷனுக்கு சென்று விட்டு பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்குச் சென்ற சிறுமியை இருட்டான ஒரு இடத்தில் கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அந்த சிறுமி அச்சா ...அம்மே… என அலறியுள்ளார். திரும்பி சத்தம் போட்டவுடன் அங்கிருந்த இருவரும் தப்பி ஓடி உள்ளனர். அதில் ஒருவன் திபு திபுவென ஓடிய போது அவன் அணிந்திருந்த செருப்பின் சத்தம் தெளிவாக சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.

இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: மதிய உணவால் தப்பித்த கேரள குடும்பத்தினர்: பரபரப்பு தகவல்கள்..!

 

இது தொடர்பாக கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதில் ஒருவன் அணிந்திருந்த காலணி மற்றும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். பிறகு சிறுமியிடம் அத்துமீறிய பீகார் மாநிலம் கிஷான் பஞ்ச் பகுதியைச் சேர்ந்த பைசான், இமான் அலி ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளனர். 

இதையும் படிங்க: பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதல்.. உயிரிழந்த கேரள மாநிலத்தவர் உடல் கொச்சினுக்கு வருகிறது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share