×
 

கடவுள் தேசத்தை உலுக்கும் ஷிகெல்லா தொற்று! 120ஆக அதிகரித்தது பாதித்தவர்கள் எண்ணிக்கை! ஹைஅலர்ட்!

கேரளாவில், 'ஷிகெல்லா பாக்டீரியா' தொற்று நேற்று மேலும் 10 பேருக்கு உறுதியானதால், இந்த மாதத்தில் மட்டும் மொத்த தொற்று பாதிப்பு, 120 ஆக உயர்ந்து உள்ளது.

கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் நேற்று மட்டும் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், ஜூன் மாதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாசுபட்ட குடிநீர், சுகாதாரமற்ற உணவு மற்றும் கழிப்பிடங்கள் வழியாக பரவும் இந்த ஷிகெல்லா தொற்று, கடந்த மார்ச் மாதம் கோழிக்கோடு மாவட்டத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட 3 வயது சிறுமி உயிரிழந்தது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் வயநாடு, மலப்புரம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு தொற்று பரவியது.

கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, நேற்று கோழிக்கோட்டில் 3 பேருக்கும், திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், பாலக்காட்டில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2026ஆம் ஆண்டில் மட்டும் ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: திடீரென ரெய்டு வந்த போலீஸ்! குக்கரில் கஞ்சாவை ஒளித்து வைத்த ஆசாமி! விசில் வந்ததால் சிக்கல்!

இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குடிநீரை காய்ச்சி குடிப்பது, சுத்தமான உணவுகளை மட்டுமே பயன்படுத்துவது மற்றும் தனிநபர் சுகாதாரத்தை கடைப்பிடிப்பது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வரும் நபருடன் தொடர்பில் இருந்த 14 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஹாஸ்பிட்டல் கழிப்பறையில் குழந்தை பெற்ற இளம்பெண்! ஜன்னல் வழியே தூக்கி எறிந்த கொடூரம்! கேரளாவில் அதிர்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share