×
 

பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இருந்து கேரளா விலகாது!! கேரள முதல்வர் சதீசன் வெளிப்படை!

''மத்திய அரசின், 'பி.எம்., ஸ்ரீ' திட்டத்தில் இருந்து கேரளா விலகாது. எனினும், மாநிலத்திற்கு பாடத்திட்டத்தை தீர்மானிக்கும் அதிகாரம் இருக்கும் வகையில் நிபந்தனைகளுடன் இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்போம்,'' என, அம்மாநில முதல்வர் சதீசன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, மத்திய அரசின் பி.எம். ஸ்ரீ (PM SHRI) பள்ளிகள் திட்டத்தில் புதிய அரசு தொடருமா என்ற கேள்விக்கு முதல்வர் சதீசன் முக்கிய விளக்கம் அளித்துள்ளார். பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இருந்து கேரளா விலகாது என்றும், ஆனால் மாநிலத்தின் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் சில நிபந்தனைகளுடன் மட்டுமே திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சதீசன், முந்தைய அரசு ஏற்கனவே மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து ரூ.99 கோடி நிதி பெற்றுள்ளதால் திட்டத்தை முழுமையாக கைவிட முடியாத சூழ்நிலை இருப்பதாக கூறினார். அதே நேரத்தில், மாநிலத்தின் கல்விக் கொள்கை மற்றும் பாடத்திட்ட உரிமைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

பாடத்திட்டத்தை தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே இருக்க வேண்டும், எந்த பள்ளிகளில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதையும் மாநிலமே முடிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். பள்ளிக் கல்வியில் எந்தவித மத அல்லது வகுப்புவாத சிந்தனைகளும் புகுத்தப்படாத சூழலை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: கேரளாவில் பெண்களுக்கு ஃப்ரீ பஸ்..!! இன்று முதல் அமலுக்கு வந்தாச்சு..!!

இந்த விவகாரத்தை விரிவாக ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் அடங்கிய சிறப்பு துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

இதனுடன், கேரள அரசின் பொது கொள்முதல் முறையையும் நவீனமயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நடைமுறைகள் காலாவதியானவை என்பதால், மின்-கொள்முதல் உள்ளிட்ட வெளிப்படையான மற்றும் விரைவான அமைப்புகளை கொண்டு வர புதிய அமைச்சரவை துணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறையில் மாநில உரிமைகளை பாதுகாத்தபடியே மத்திய நிதியைப் பயன்படுத்தும் கேரள அரசின் இந்த முடிவு, அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. பி.எம். ஸ்ரீ திட்டம் தொடர்பான கேரளாவின் புதிய அணுகுமுறை, நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது

இதையும் படிங்க: கேரளாவில் ஆண்களுக்கான புதிய பேஷன் புரட்சி..!! ட்ரெண்டாகும் நைட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share