×
 

நாட்டையே உலுக்கிய கிட்னி முறைகேடு வழக்கு... ஐகோர்ட்டிற்கு எதிராக தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவு...!

கிட்னி மோசடி வழக்கை விசாரிப்பதற்கான விசாரணை குழுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்களை நியமித்துள்ள நிலையில் தமிழக அரசு மேல் முறையீடு செய்திருக்கிறது.

கிட்னி முறைகேடு தொடர்பான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் நிலையில், தமிழக அரசு மேல் முறையீடு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. 

தமிழ்நாட்டில் கிட்னி முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயநீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த குழுவினுடைய விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும், முதற்கட்ட விசாரணை அறிக்கையை வரும் 24ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மதுரை கிளையானது உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் இந்த உத்தரவிற்கு தடைவிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: சவுதியுடன் ஒரேடியாக ஒட்டி உறவாடும் பாக்., அணு ஆயுத பரிமாற்றத்துக்கும் டீல்! இந்தியாவுக்கு நெருக்கடி!

வழக்கின் பின்னணி என்ன?

நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாக சிறு நீரகத்தை தானம் பெற்றனர். இதற்காக போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன. தொழிலாளர்களை, 5 முதல் 10 லட்சம் ரூபாய்க்கு சிறு நீரகங்களை விற்க வற்புறுத்தியதாக வெளியான புகார்கள் நாட்டையே உலுக்கியது. 

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நலமனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கிட்னி விற்பனை முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் இந்த வழக்கை மாநில போலீசார் விசாரித்தால் நேர்மையாக இருக்காது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை, சிபிஐ நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில், நீலகிரி எஸ்பி நிஷா, திருநெல்வேலி எஸ்பி சிலம்பரசன், கோவை எஸ்பி கார்த்திகேயன், மதுரை எஸ்பி அரவிந்த் ஆகியோர் இடம்பெறுவார்கள். இக்குழு நடத்தும் விசாரணை ஐகோர்ட் மதுரைக் கிளையால் நேரடியாக கண்காணிக்கப்படும். முதற்கட்ட விசாரணை அறிக்கையை வரும் செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: சீனாவுக்கு தூண்டில் போடும் ட்ரம்ப்!! தைவானை கழட்டி விட்ட அமெரிக்கா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share