×
 

வார்த்தையை விட்டு வசமாக சிக்கிய ராகுல் காந்தி... விடிந்ததும் இடி மேல் இடியாய் இறங்கிய செய்தி...!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு எதிராக உரிமை மீரல் தீர்மானம் கொண்டுவரப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருக்கிறார். 

 மக்களவையில் இந்திய அமெரிக்க இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக  மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசிய உரைக்கு எதிராக உரிமை மீரல் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருக்கிறார். ராகுல் காந்தியுடைய குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் இல்லாத பொய் பொய் குற்றச்சாட்டுகள், அதேபோல ராகுல் காந்தி நாட்டையும் நாடாளுமன்றத்தையும் தவறாக வழிநடத்துகிறார். ராகுலின் பேச்சு முழுக்க முழுக்க உரிமை மீறல் விவகாரம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

அதேபோல ராகுல் காந்தி மக்களவையில் இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசும்போது பாரத மாதாவை மத்திய பாஜக அரசு விற்றுவிட்டதாகவும் இந்தியாவை விற்க  உங்களுக்கு எங்கிருந்து துணிவு வந்தது என்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து காட்டமாக பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இந்திய அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஒருதலைபட்சமானது. மத்திய அரசு அமெரிக்காவுடன் கூடிய வர்த்தக ஒப்பந்தம் தேசிய நலனுக்கு தீங்கிழைப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவை விற்று விட்டீர்களா என்று கடுமையான கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக விவசாயிகள் கைத்தொழில் மற்றும் குறைந்த வருமானத்திறையின் பங்களிப்பு பாதிக்கப்படுவதாகவும் வரித்தேர்வு மாற்றம் குறித்தும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாடாளுமன்றத்தில் பேசினார். 

அதேபோல ஒப்பந்தத்திற்கு பிறகு அமெரிக்க வரிகளின் சராசரி விதிப்பு என்பது 3%லிருந்து 18%ஆக உயர உயர்ந்துள்ளது. இது எதிர்பாராத மாற்றம் என்றும் அதேபோல இந்தியா பிரதான சொத்துக்கள் சர்வதேச வர்த்தக விதிகளுக்குள் வருவதால் அதனுடைய கட்டுப்பாட்டையும் இழக்கிறது. சமமானவராக பேசி வர்த்தகம் பேண வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது இரு நாடுகளும் சமமாகவே பேச வேண்டும். ஆனால் இந்திய அமெரிக்க ஒப்பந்தம் தேசிய சுதந்திரத்தை தாக்குகிறது. எரிசக்தி பாதுகாப்பு விவசாய பாதுகாப்பு போன்ற அணுக்கள் வெளிநாட்டின் கட்டுப்பாட்டில் வர வாய்ப்புள்ளது என கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைத்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: அமெரிக்க விவசாயத்துறை இந்திய விவசாயிகளை நசுக்கும்...! ராகுல் காந்தி எச்சரிக்கை..!

இதற்காகத்தான் தற்பொழுது மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருக்கிறார். 
 

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கும், ட்ரம்புக்கும் பயப்படாத மோடி ராகுலுக்கு பயப்படுவாரா? முதல்வருக்கு தமிழிசை பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share