×
 

கும்பமேளா மோனாலிசா காதல் திருமணம்! பெற்றோர் எதிர்ப்பால் கேரள போலீசில் தஞ்சம்!

கும்பமேளா புகழ் மோனலிசா, கேரளா கோவிலில் இன்று காதலனை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் எதிர்ப்பால், பாதுகாப்பு கோரி தம்பனூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார்.

திருவனந்தபுரம்: 2025 கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்று வைரலான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மோனாலிசா போஸ்லே, தனது காதலனை கேரளா கோயிலில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாதுகாப்பு கோரி தம்பனூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்துள்ளார்.

கும்பமேளாவின் போது அவரது வசீகரமான கண்கள் மற்றும் புன்னகை ஊடகங்களில் வைரலானது. இதனால் சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. தற்போது மணிப்பூர் பின்னணியில் எடுக்கப்பட்ட அவரது முதல் படமான 'டைரி ஆப் மணிப்பூர்' படப்பிடிப்புக்காக கேரளாவுக்கு வந்திருந்தார். அவருடன் தந்தை ஜெய் சிங் போஸ்லேவும் வந்திருந்தார்.

முகநூல் மூலம் அறிமுகமான மோனாலிசாவும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பர்மானும் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தனர். எர்ணாகுளத்தில் இருவருக்கும் இடையே தந்தை ஜெய் சிங் கடும் வாக்குவாதம் நடத்தியதாக தகவல். இதனால் மோனாலிசா தனது காதலன் பர்மானுடன் ரயிலில் திருவனந்தபுரம் வந்தார். அங்கு அருமனூர் கோயிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இதையும் படிங்க: தொடரும் போர் பதற்றம்!! ஈரான் புதிய ஆட்சியர் நிலை என்ன? அந்நாட்டு அதிபர் பரபரப்பு அப்டேட்!

திருமணத்துக்குப் பிறகு பெற்றோர் எதிர்ப்பை மீறியதால் பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டது. உடனடியாக தம்பனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற மோனாலிசா, "எனது தந்தை எங்களை பிரிக்க முயல்கிறார். எங்களுக்கு பாதுகாப்பு தேவை" என்று கோரிக்கை வைத்தார். ஆனால் தந்தை மீது புகார் தர மாட்டேன் என்றும் தெளிவுபடுத்தினார்.

கேரளா போலீசார் கூறுகையில், "இருவரும் காதலில் உறுதியாக இருப்பதாகவும், திருமணம் நடந்ததாகவும் தெரிவித்தனர். விசாரணை நடத்தி வருகிறோம். தற்போது இருவரும் பாதுகாப்பாக உள்ளனர்" என்றனர்.

கும்பமேளா வைரல் பெண்ணின் இந்த காதல் திருமணம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்காக பெற்றோர் எதிர்ப்பை மீறி போலீஸ் உதவி கோரியது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. மோனாலிசாவின் சினிமா பயணத்துடன் இந்த தனிப்பட்ட வாழ்க்கை சம்பவம் இணைந்து அவருக்கு மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: இபிஎஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றது ஏன்?... முதல் முறையாக மனம் திறந்த டிடிவி தினகரன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share