×
 

CM SIR என குரல் கொடுத்தால் ஆட்சி மாறிடுமா? கி.வீரமணி ஆவேசம்...!

சி.எம். சார் என குரல் கொடுத்தால் ஆட்சி மாறிவிடுமா என விஜய்க்கு கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.

தமிழ் சினிமாவின் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது திரை வாழ்க்கையின் மூலம் தமிழக மக்களின் இதயங்களை கைப்பற்றியவர். ஆனால், அவரது அரசியல் பயணம் தொடங்கியபோது, அந்த ரசிகர்களின் அன்பு இன்னும் ஆழமான, உணர்ச்சிகரமான வடிவத்தை அடைந்தது. 2024 பிப்ரவரி 2 அன்று தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியபோது, விஜயின் ரசிகர்கள் அது வெறும் கட்சி அல்ல, அவர்களின் கனவுகளுக்கான ஒரு இயக்கம் என்று உணர்ந்தனர்.

இந்த அன்பு, வெறும் பட ரசிகர்களின் உற்சாகத்தைத் தாண்டி, அரசியல் அடிப்படை உருவாகி, கட்சியின் வேர்களை வலுப்படுத்தியது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னோட்டமாகக் கொண்டு தனது தேர்தல் சுற்றுப்பயணங்களை விஜய் மேற்கொண்டார். கரூர் சம்பவத்தின் மூலம் தனது சுற்றுப்பயணத்தை விஜயை ஒத்தி வைத்துள்ளார்.

இதற்கிடையில் முதலமைச்சர் ஸ்டாலினையும் திமுக அரசையும் பாஜகவையும் கடுமையாக விஜய் விமர்சித்து வந்தார். சிஎம் சார் எனக் கூறி வந்தார் விஜய். இந்த நிலையில் Chief Minister Sir என குரல் கொடுத்தால், ஆட்சி மாறிவிடுமா என விஜய்க்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: ஊடகங்களை முடக்கும் திமுக அரசு… சட்டம் ஒழுங்கே சந்தி சிரிக்குது! விளாசிய அண்ணாமலை…!

இன்றைக்கு உங்களுக்கு வெளியே வர தைரியம் இல்லை என்றும் உங்களுடைய நடவடிக்கைகளைப் பற்றி நீதிமன்றம் தோலை உரித்துள்ளது எனவும் தெரிவித்தார். இந்த ஆட்சிக்கு சவால் விடுகிறீர்களா என்றும் கருப்பு சட்டைக்காரரின் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும் வரையில் உங்கள் கதை நடக்காது எனவும் கி.வீரமணி ஆவேசப் பேசினார்.

இதையும் படிங்க: எந்த நிலையில் இருக்கு? மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share