×
 

எப்போ ரூ.2,500..? சொன்னதை செய்த பாஜக..! பெண்களை ஏமாற்றிய தவெக..! L.முருகன் விளாசல்..!!

மகளிர் உரிமை தொகை விவகாரத்தை சுட்டிக்காட்டி எல். முருகன் விமர்சனம் செய்தார்.

பெண்களுக்கு மாதம் 2,500 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது. தற்போது ஆட்சி அமைத்த நிலையில் ஏற்கனவே திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டு வந்த மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் மட்டுமே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகாக 2500 ரூபாய் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் பெண்களை ஏமாற்றி விட்டதாகவும் பாஜக சொன்னதை செய்திருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 2500 கொடுப்பது எப்போது என்று கேட்டு இருக்கிறார். இதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஜூன் மாதத்திலும் அதே ரூ.1,000 மட்டுமே பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ரூ. 2.500 எப்போது தரப்படும் என்ற கேள்விக்கு தவெக அரசிடம் பதில் இல்லை என்று கூறியுள்ளார். மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் மாதம் தோறும் பெண்களுக்கு ரூ. 3000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தோம் என்றும் அதன்படி பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அறிவித்தபடி அன்னபூர்ணா யோஜனா திட்டம் செயல்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி பெண்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: திமுகவின் XEROX தவெகவா.? வலுக்கும் எதிர்ப்பு..! தமிழக பாஜக விளாசல்..!!

பெண்களுக்கு ரூ.3000 வழங்குவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது பாஜக. ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன? என்று கேட்டார். தேர்தல் காலத்தில் அண்ணன், தம்பி, மாமா என்ற உணர்வுபூர்வமான பேச்சுகளால் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று அந்த மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்றும் நம்பிக்கைக்கு உரிய பதிலை மக்கள் முதலமைச்சரிடம் எதிர்பார்த்துக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புனித பூமியில் நிகழ்ந்த கொடூரம்..!! வேற ஆதாரம் வேணுமா..? நயினார் ஆவேசம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share