வெல்வாரா? வீழ்வாரா? ... பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமிக்கு பேரிடி... அதிமுகவினருக்கு இன்று காத்திருக்கும் ஷாக்கிங் நியூஸ்...!
திமுக சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்படுவாரா அல்லது எஸ்.பி. வேலுமணி பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் அந்த பதவியை பெறுவாரா என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கேள்வியாகியுள்ளது.
தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக சட்டமன்ற குழுத் தலைவர் பதவியைச் சுற்றி புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில், 30 அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களுடன் குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவைக்கு சென்றுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இன்று முடிவெடுக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த ஆதரவு கடிதத்தில் எஸ்.பி. வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்ய வேண்டுமென வலியுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சி. விஜயபாஸ்கர்வை கட்சியின் கொறடாவாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு, நேற்று காலை எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் தற்காலிக சபாநாயகரை சந்தித்து மனு அளித்திருந்தனர். அவரை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் தற்போது, 47 அதிமுக எம்எல்ஏக்களில் 30 பேர் வேலுமணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது, கட்சிக்குள் அதிகாரப் போட்டி வெளிப்படையாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. சி.வி. சண்முகத்துடன், நத்தம் விசுவநாதன், கே.சி. வீரமணி, காமராஜ், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்களும் தலைமைச் செயலகத்திற்கு சென்றிருந்தனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி அதிருப்தி, தற்போது சட்டமன்ற குழுத் தலைவர் தேர்வை மையமாகக் கொண்டு வெளிப்படையான அணிப் பிரிவாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இரு தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியானாலும், அவை பலனளிக்கவில்லை என தெரிகிறது.
இதனிடையே, “அதிமுகவில் எந்த பிளவும் இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்த நிலையில், தற்போது இரு அணிகளும் தனித்தனியாக ஆதரவு மனுக்கள் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்படுவாரா அல்லது எஸ்.பி. வேலுமணி பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் அந்த பதவியை பெறுவாரா என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கேள்வியாகியுள்ளது.
இந்த மனுக்கள் குறித்து தற்காலிக சபாநாயகர் பரிசீலனை செய்து இன்று முடிவெடுப்பார் எனக்கூறப்படுகிறது. வழக்கமான நடைமுறைகளின் படி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அதிகமுள்ளவரே சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்கப்படுவார் என்பதால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை இழந்த எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற குழுத் தலைவர் என்ற பதவியையும் இன்று இழக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், சட்டமன்றக்குழு தலைவர் தொடர்பாக அறிவிப்பு வெளியாகவுள்ளது அதிமுகவினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடிக்கு 17 பேர் மட்டுமே ஆதரவு?! 36 எம்.எல்.ஏ-க்கள் முரண்பாடு! அதிமுக சட்டசபை தலைவர் பதவிக்கு ஆப்பு?!