×
 

பாகிஸ்தானியர்கள் தொடர்ந்து இந்தியாவில் தங்கலாமா..? மத்திய அரசு கூறும் விளக்கம் என்ன?

பாகிஸ்தானியர்கள் தொடர்ந்து இந்தியாவில் தங்கலாமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த மக்கள் இந்தியாவிலிருந்து இன்றுடன் (29ம்தேதி) அந்நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு கெடுவிதித்திருந்த நிலையில் குறிப்பிட்ட விசா வைத்திருப்பவர்கள் மட்டும் செல்லுபடியாகும் என மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டதற்கு எதிராக இந்தியா பல்வேறு ராஜாங்கரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது, இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவிட்டது, விசாக்களை ரத்து செய்தது, எல்லைகளை மூடியது, வர்த்தகப் போக்குவரத்தை துண்டித்து பாகிஸ்தானை தனிமைப்படுத்தியது.

இதையும் படிங்க: கிடப்பில் வீசப்பட்ட ஒரு டஜன் எஸ்டி, எஸ்சி, ஓபிசி அறிக்கைகள்.. 7 ஆண்டுகளாக வெளிப்படுத்தாத மத்திய அரசு..!

இந்நிலையில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் மக்கள் 27ம் தேதிக்குள் வெளியேற வேண்டும், அவ்வாறு அவர்கள் வெளியேறுகிறார்களா என அந்தந்த மாநில அரசுகள் கண்காணித்து 29ம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டது. இதையடுத்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குடியேற்ற அதிகாரிகள் பாகிஸ்தானியர்களைக் கணக்கெடுத்து, அவர்கள் தங்கியிருக்கும் பகுதியை அறிந்து அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணியை செய்து வருகிறார்கள்.

இதில் விதிவிலக்காக பாகிஸ்தானியர்களில் எல்டிவி விசா அதாவது நீண்டகால விசா அல்லது ராஜாங்கரீதியிலான விசா வைத்திருப்பவர்கள் 29ம் தேதிக்குள் பின்னும் செல்லுபடியாகும் என மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அதிகாரிகள் கூறுகையில் “பாகிஸ்தானியர்களுக்கு 16 வகையான விசாக்களை மத்திய அரசு வழங்கியது. இதில் 2 விசாக்கள் மட்டும் ஏப்ரல் 29ம் தேதிக்குப் பின்பும் செல்லுபடியாகும். எல்டிவி விசாக்கள் வைத்திருப்பவர்கள் மத அடையாளத்தோடு இருந்தாலும் அவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.

கடந்த 23ம் தேதி வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில் “சார்க் விசா திட்டத்தின் கீழ்  பாகிஸ்தானியர்களகு்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 26ம் தேதியோடு ரத்து செய்யப்படுகிறது. இந்தியாவை விட்டு வெளியேறும்போது பாகிஸ்தானியர்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டும், அடாரி வாகா எல்லையில் வெளியேறும்போது அதிகாரிகளிடம் ஆவணங்களை காண்பிக்க வேண்டும். 

இந்தியாவுக்குள் வந்தபின் விசா பெறும் திட்டம் தொழிலதிபர்கள், பார்வையாளர்கள், சினிமா துறையினர், பத்திரிகையாளர்கள், டிரான்சிஸ்ட் விசா, மாநாடுகள், மலைஏறுபவர்கள், சுற்றுலாப்பயணிகள் ஆகியோருக்கு 27ம் தேதியோடு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள், குழுவாக யாத்ரீகம் வந்துள்ளவர்களுக்கான விசாவும் ரத்து செய்யப்பட்டது.

ஆனால், தூதரகத்தில் பணியாற்றுவோர், தூதரகரீதியாக பணியில் இருக்கும் பாகிஸ்தான் அதிகாரிகள், ஊழியர்களுக்கு விசா காலம் முடிந்தாலும் அதன் கெடுவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்யும். பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், நீண்டகால விசாவை இந்திய அரசிடம் பெற்றிருந்தால் அவர்கள் 29ம் தேதிக்குப் பின்பும் அவர்கள் விசா செல்லுபடியாகும். நீண்டகால விசா வைத்திருப்பவர்களுக்கு விசா ரத்து உத்தரவு பொருந்தாது, பாகிஸ்தான் இந்துக்களுக்கு இந்த விசா தொடர்ந்து செல்லுபடியாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பைசாரன் பள்ளத்தாக்கு திறக்கப்பட்டதை பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கவில்லை.. அரசு ஒப்புதல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share