வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மத்திய மேற்கு, அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியிலும் வடக்கு ஆந்திரா இடையிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டி உள்ள வட மேற்கு வங்காள விரிகுடா, வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரைகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது.
இது மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது
இதையும் படிங்க: பிரிச்சு நவுத்த போகுது மழை... காற்றழுத்த தாழ்வு நிலையால் எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. சென்னை, எண்ணூர், காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன், நாகை, கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இதோ வந்துட்டான்ல... வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் கனமழை
புயல் எச்சரிக்கை என்பது மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் விடுக்கப்படும் ஒரு முக்கியமான முன்னறிவிப்பு. இது வானிலை ஆய்வு மையங்கள் மற்றும் அரசு அமைப்புகளால் துல்லியமான தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது. இதனால் மக்கள் முன்கூட்டியே தயாராகி, புயலின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். புயல் எச்சரிக்கையின் முதன்மை நோக்கம், புயலின் வருகை, வேகம், பயணிக்கும் திசை மற்றும் சாத்தியமான பாதிப்புகள் குறித்து மக்களுக்கு தெளிவாக அறிவிப்பதாகும். இதன் மூலம், மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதுகாக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.