இன்னும் இருக்கு! 12 மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்... உஷார் மக்களே!
அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயில் காலம் தொடங்கியது முதலே அவ்வப்போது மழைப்பொழிவு இருந்து வந்தது. இருப்பினும் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து சதம் அடித்தது. இதனிடையே கடந்த 16ஆம் தேதி முதல் லேசான மழைப்பொழிவு இருந்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியும் மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 4 அல்லது 5 நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஜில் அப்டேட்..! வெளுக்கப் போகுது மழை.. எந்ததெந்த இடங்கள் தெரியுமா?
இந்த நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா - கோவா கடற்கரையில் கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சவுத் பார்முலாவை கையில் எடுத்த சசிகலா.. எடப்பாடியை மடக்க பாஜக கொடுத்த மாஸ்டர் பிளான்!