×
 

பெட்ரோல் பங்குகளில் UPI பணப்பரிவர்த்தனை நிறுத்தம்... ம. பி. அரசு அதிரடி..! மக்கள் தலையில் பேரிடி..!!

மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்குகளில் யுபிஐ பண பரிவர்த்தனை நிறுத்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் இயங்கும் சுமார் 4,700 பெட்ரோல் பங்குகளிலும் அக்டோபர் 16 முதல் ரூ.2,000-க்கு மேலான எரிபொருள் கட்டணங்களுக்கு யூபிஐ மூலம் பணம் ஏற்றுக்கொள்ளப்படாது. அதற்கு பதிலாக வாடிக்கையாளர்கள் பணமாகவே செலுத்த வேண்டும். ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டும் யூபிஐ தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும்.இந்த முடிவுக்குக் காரணம், அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ள மெர்ச்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட் (எம்டிஆர்) கட்டணம்தான்.

ரூ.2,000-க்கு மேலான வணிக யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு பொதுவாக 0.4 சதவீத கட்டணம் விதிக்கப்படும். ஆனால் எரிபொருள் விற்பனைக்கு சலுகை வகையில் வைக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் நிலையான ரூ.5 எம்டிஆர் விதிக்கப்படும். அதனுடன் 18 சதவீத ஜிஎஸ்டியும் சேர்த்தால் ஒரு பரிவர்த்தனைக்கு மொத்தம் ரூ.5.90 செலவாகும். இந்த தொகையை வியாபாரிகளே ஏற்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கக் கூடாது என்பது விதி.பெட்ரோல் பங்குகளின் லாபம் ஏற்கனவே குறைவாகவே உள்ளது. அதில் இந்த கூடுதல் செலவு பெரும் சுமையாக மாறும் என்று சங்கம் கணக்கிட்டுள்ளது. சராசரியாக ஒரு பங்கில் ஒருநாளைக்கு 100 பரிவர்த்தனைகள் ரூ.2,000-க்கு மேல் நடைபெறுகின்றன. அதன்படி தினசரி சுமார் ரூ.590, மாதத்திற்கு சுமார் ரூ.17,400 கூடுதல் செலவு ஏற்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள 4,700 பங்குகளுக்கும் கணக்கிட்டால் மாதத்திற்கு சுமார் ரூ.8.17 கோடி அளவுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்று சங்கத் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.“எங்கள் லாபம் குறைவு. இந்த கூடுதல் செலவை ஏற்க முடியாது. எனவே அக்டோபர் 16 முதல் ரூ.2,000-க்கு மேல் யூபிஐ ஏற்க மாட்டோம். பணம் மட்டும்தான். வேலைநிறுத்தம் செய்யவோ, மனு கொடுக்கவோ இல்லை. நேரடியாக இந்த முடிவை அமல்படுத்துகிறோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.இந்த நடவடிக்கை டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வர்த்தக அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளன. நீண்ட காலமாக யூபிஐ ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இப்போது கட்டணம் விதிப்பதால் வியாபாரிகள் பணப்பரிவர்த்தனைக்குத் திரும்பலாம் என்ற அச்சம் உள்ளது. எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

வாடிக்கையாளர்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக வணிக வாகன ஓட்டிகள் மற்றும் அதிக எரிபொருள் எடுக்கும்வர்கள் பணத்தை தயாராக வைத்திருக்க வேண்டியிருக்கும். ரூ.2,000-க்குள் எரிபொருள் நிரப்பினால் யூபிஐ தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த முடிவு தற்காலிகமானதாக இருக்கலாம். அரசு கட்டணத்தை திரும்பப்பெற்றால் சங்கம் மீண்டும் யூபிஐ ஏற்கத் தயாராக இருக்கும் என்று தெரிகிறது.மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் இந்த முடிவை கடைப்பிடிப்பதால், எரிபொருள் நிரப்பச் செல்பவர்கள் அக்டோபர் 16 முதல் போதுமான பணத்தை எடுத்துச் செல்வது நல்லது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பரவலாக இருந்தாலும், இந்த கட்டணச் சுமை காரணமாக பணமுறைக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது.

 

இதையும் படிங்க: திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம்? பசு நெய் பெயரில் பாமாயில்? சுக்ருதி புட்ஸ் உரிமையாளரை கைது செய்த ED!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share