#BREAKING திடீர் உடல் நலக்குறைவு... மதுரை மேயர் கணவர் பொன்.வசந்த் மருத்துவமனையில் அனுமதி...!
மதுரை மாநகராட்சி பல கோடி ருபாய் சொத்துவரி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மேயர் பொன்.வசந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேட்டில் கைது செய்யப்பட்ட மேயரின் கணவர் பொன்வசந்த்திற்கு மருத்துவ பரிசோதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருந்த நிலையில், தற்போது திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் பணியாற்றியபோது மாநகராட்சியில் கடந்த 2022-2023-ஆம் ஆண்டுகளில் பல கோடி ருபாய் வரை வரி வசூலில் முறைகேடு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி வரி குறைப்பு செய்தது ஆய்வில் தெரிய வந்த நிலையில் இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினருக்கு ஆணையாளர் தினேஷ்குமார் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இதில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், ஒப்பந்த ஊழியர்கள், மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்ளிட்ட 13 பேர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: கட்டு, கட்டாக சிக்கும் முக்கிய ஆவணங்கள்... பிரபல பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் 3வது நாளாக தொடரும் சோதனை...!
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் தலைமையிலான விசாரணை குழு தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மதுரை மாநகராட்சியில் இருந்து தூத்துக்குடி மநாகராட்சிக்கு உதவி ஆணையாளராக சென்று பணியாற்றிய சுரேஷ்குமார் என்பவரை மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்த மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரான பொன்வசந்தும் சென்னையில் கைது செய்யப்பட்டு நேற்று இரவு விசாரணை நடத்துவதற்காக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பாக காலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்டார்.
அங்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்திற்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளில் அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகம் மற்றும் இசிஜியில் மாறுதலாக உள்ளதாக மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொன்.வசந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோசடி புகார்... மதுரை மேயர் கணவரை சென்னையில் வைத்து தூக்கிய போலீஸ் - பின்னணி என்ன?