×
 

சட்டசபையில் ரம்மி ஆடிய அமைச்சருக்கு விளையாட்டுத்துறை! மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு..

சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர் விளையாட்டுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா அரசியலில் இப்போ பெரிய பரபரப்பு ஒண்ணு உருவாகியிருக்கு. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சியைச் சேர்ந்த வேளாண் அமைச்சர் மாணிக்ராவ் கோகடே, சட்டமன்ற கூட்டத்தின்போது செல்போனில் ரம்மி விளையாடுற வீடியோ வெளியாகி, பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கு. இதோட விளைவா, அவருக்கு தண்டனையா வேளாண் துறை பறிக்கப்பட்டு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒப்படைக்கப்பட்டிருக்கு.

 இதோட, மாணிக்ராவுக்கு சிறுபான்மையர் மேம்பாடு மற்றும் அவ்காஃப் துறையும் கூடுதலா கொடுக்கப்பட்டிருக்கு. இந்த மாற்றத்துக்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர் அஜித் பவாரும் சந்திச்சு பேசி முடிவு எடுத்திருக்காங்க. இப்போ வேளாண் துறையை, முன்னாடி விளையாட்டு துறையை கவனிச்ச தத்தாத்ரேய பர்னே கையாளப் போறாரு.

இந்த ரம்மி விவகாரம் ஜூலை 20-ம் தேதி வெளியான வீடியோவால தொடங்குச்சு. ஷரத் பவார் தலைமையிலான NCP (SP) எம்எல்ஏ ரோஹித் பவார், மாணிக்ராவ் சட்டமன்றத்துல “ஜங்கிள் ரம்மி” ஆன்லைன் கேம் ஆடுற வீடியோவை X-ல பதிவு செஞ்சு, “மகாராஷ்டிராவுல ஒரு நாளைக்கு 8 விவசாயிகள் தற்கொலை செய்யுறாங்க, ஆனா வேளாண் அமைச்சர் ரம்மி ஆடுறாரு,”னு கடுமையா விமர்சிச்சாரு.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகையில் மிகப்பெரிய மோசடி அம்பலம்.. மராட்டிய து.முதல்வர் சொன்ன விஷயம்..!!

இந்த வீடியோ, எதிர்க்கட்சிகளுக்கு பெரிய ஆயுதமாகிடுச்சு. “இது ஜனநாயகத்துக்கு அவமானம்,”னு NCP (SP) எம்எல்ஏ ஜிதேந்திர அவாதும், “விவசாயிகள் கஷ்டப்படும்போது அமைச்சர் கேம் ஆடுறாரு,”னு சிவசேனா (UBT) தலைவர் சஞ்சய் ராவுத்தும் ஆவேசமா குற்றம்சாட்டினாங்க.

மாணிக்ராவ் இதுக்கு முன்னாடியும் சர்ச்சைகளில் சிக்கியிருக்காரு. விவசாயிகளை “பிச்சைக்காரர்கள்”னு ஒப்பிட்டு, “ஒரு ரூபாய் பயிர்க்காப்பீடு திட்டத்தை கூட தவறா பயன்படுத்துறாங்க,”னு சொன்னது பெரிய எதிர்ப்பை கிளப்பிச்சு. இதோட, அரசு திட்டங்களில் 3-4% ஊழல் இருக்குன்னு ஒப்புக்கொண்டு, “அதுக்காக திட்டங்களை நிறுத்த முடியாது,”னு சொன்னதும் பரபரப்பை ஏற்படுத்துச்சு. 1995-ல் வீட்டு மோசடி வழக்குல 2025-ல் இரண்டு வருஷ சிறை தண்டனை கிடைச்சு, பிறகு தடை உத்தரவு பெற்று தப்பிச்சவரு இவரு.

இந்த ரம்மி விவகாரத்துக்கு மாணிக்ராவ், “நான் ரம்மி ஆடலை, விளம்பரத்தை மூட முயற்சி செஞ்சேன்,”னு மறுத்து, “நான் குற்றவாளின்னு நிரூபிச்சா ராஜினாமா செய்யுறேன்,”னு சவால் விட்டாரு. ஆனா, சட்டமன்ற விசாரணையில் அவரு 18-22 நிமிஷம் ரம்மி ஆடியதா தெரியவந்து, அவருக்கு எதிரான அழுத்தம் அதிகமாச்சு. ஜூலை 29-ல் அஜித் பவாரை சந்திச்சு மாணிக்ராவ் மன்னிப்பு கேட்டாரு, ஆனா அவருக்கு ஆதரவு கிடைக்கலை. இதையடுத்து, அஜித் பவாரும் பட்னாவிஸும் சேர்ந்து, மாணிக்ராவை வேளாண் துறையிலிருந்து நீக்கி, விளையாட்டு துறையை ஒப்படைச்சாங்க.

இந்த மாற்றம் மகாராஷ்டிரா அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. விவசாயிகளின் பிரச்சினைகளை கவனிக்க வேண்டிய அமைச்சர், ரம்மி ஆடியதும், சர்ச்சை கருத்துக்களை சொன்னதும் மக்கள் மத்தியில் கோவத்தை கிளப்பியிருக்கு. “விளையாட்டு துறையை கொடுத்து, மாணிக்ராவை அஜித் பவார் காப்பாத்திட்டாரு,”னு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுறாங்க. இந்த சர்ச்சை மகாயுதி கூட்டணிக்கு வரும் தேர்தல்களில் பின்னடைவை ஏற்படுத்தலாம்னு அரசியல் விமர்சகர்கள் சொல்றாங்க.

இதையும் படிங்க: நிர்வாணமா நிக்க வச்சு செக் பண்ணாங்க.. பள்ளி மாணவிகளிடம் குரூர முகம் காட்டிய 5 பேர் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share