×
 

தமிழன் மேல கை வைங்க பாப்போம்! மகாராஷ்டிரா மொழி சண்டையில் தமிழகத்தை வம்புக்கு இழுக்கும் பாஜக..!

மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மராத்தி பேசமாட்டேன் என்று சொன்ன தொழிலதிபர் அலுவலகத்தை ராஜ் தாக்கரே கட்சி தொண்டர்கள் தாக்கி சேதப்படுத்தினர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பயந்தர் பகுதியில் மராத்தி மொழி பேச மறுத்த வியாபாரியை ராஜ் தாக்ரேயின் எம்என்எஸ் கட்சியினர் தாக்கியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, 30 ஆண்டுகளாக மும்பையில் வசித்த போதும் மராத்தி மொழி கற்க முடியவில்லை எனக் கூறிய பங்கு வர்த்தக ஆலோசகர் சுஷில் கேடியாவின் அலுவலகத்தை எம்என்எஸ் தொண்டர்கள் சூறையாடினர். மராத்தி மொழியை காப்பதற்காக மனஸ்தாபங்களை மறந்து மீண்டும் இணைந்து செயல்பட உள்ளதாக முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சகோதரர் ராஜ் தாக்கரே அறிவித்துள்ளனர். 

இந் நிலையில், மாநிலத்தில் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து, மராத்தியை பாதுகாப்பதாகக் கூறி, உத்தவ், ராஜ் தாக்கரே அரசியல் செய்வதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து, ஜார்க்கண்ட்டை சேர்ந்த பாஜ எம்பி நிஷிகாந்த் துபே கூறிய கருத்துக்கள் மகாராஷ்டிரா அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளது.  மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் கட்சி மற்றும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சோறு போட்ட நாங்க இப்ப பிச்சை எடுக்கிறோம்.. விபரீத முடிவுகளை கையிலெடுக்கும் விவசாயிகள்..!

மராத்தியை காப்பதாகக் கூறி, ஹிந்தி பேசுவோர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்தி பேசுவோர் மீது தாக்குதல் நடத்தும் இவர்கள், மும்பையின் மாஹிம் பகுதியில் உருது பேசுவோர் மீது தாக்குதல் நடத்த முடியுமா? தமிழ், தெலுங்கு பேசுபவர்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டியது தானே. உங்கள் மாநிலத்தில் நீங்கள் டான் என்றால், உபி, ஜார்க்கண்ட், பீகார், தமிழகத்துக்கு வந்து பாருங்கள். அங்குள்ளவர்கள் உங்களை வெளுத்து வாங்கிவிடுவர். 

காஷ்மீரில் பிரிவினைவாதிகளும் பயங்கரவாதிகளும் சேர்ந்து ஹிந்து பண்டிட்டுகளை விரட்டியடித்தனர். தற்போது மகாராஷ்டிராவில் ஹிந்தி பேசுவோரை இவர்கள் விரட்டி அடிக்கின்றனர். அப்படியென்றால் இருவர் இடையே என்ன வித்தியாசம்? உங்கள் மாநிலத்தில் என்ன வளம் உள்ளது? எத்தனை தொழிற்சாலைகள் உள்ளன. வரி கட்டுவது எல்லாம் நாங்கள். எங்கள் மீதே தாக்குதல் நடத்துவீர்களா?  எந்த நாயும் அதனது வீட்டில் சிங்கம் போலத் தான் இருக்கும். இதில் நாய் யார், சிங்கம் யார் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து தாக்கரே சகோதரர்கள் மொழி அரசியலை கையில் எடுத்துள்னர். நாங்கள் மராத்தி மொழியை மதிக்கிறோம். சுதந்திரத்திற்காக போராடிய மராத்திய வீரர்களை, தலைவர்களை போற்றுகிறோம். சிவாஜி, சாகு, பேஷ்வா போன்ற ஆட்சியாளர்களை வணங்குகிறோம். ஆனால், மொழியின் பெயரில் தற்போது நடக்கும் சர்வாதிகாரத்தை, ரவுடித்தனத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என, நிஷிகாந்த் துபே கூறினார். 

நிஷிகாந்த் துபேவின் கருத்துக்கு, உத்தவ் மற்றும் ராஜ்தாக்கரே கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாட்டு மக்களிடையே மராத்தியர்கள் பற்றி அச்ச உணர்வை ஏற்படுத்தவும், பிரிவினையை உண்டு பண்ணவும் பாஜ முயற்சிக்கிறது. இது போன்ற நபர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லை என, உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.

நிஷிகாந்த் துபேவின் பேச்சு பாஜவின் உண்மை முகத்தை வெளிப்படுத்தி உள்ளது. அவர்கள் மகாராஷ்டிர மக்களை மதிப்பதில்லை. மக்களிடையே பிளவை உண்டு பண்ண பார்க்கிறார்கள் இதுபோன்ற விஷத்தை பரப்பும் நபர்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ஓயாத மொழிப் பிரச்னை.. 20 ஆண்டுகளுக்கு பின் ஒரே மேடையில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share