#BREAKING: நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டு வெடிப்பு... குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை... மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்து மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில், நாசிக் மாவட்டத்தின் மலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிய ஒரு பயங்கரவாதத் தாக்குதலாகும்.
இஸ்லாமியர்களின் புனித நாளான ஷப்-ஏ-பராத் அன்று, மதியம் 1:45 மணியளவில், மலேகான் நகரின் ஹமீதியா பள்ளிவாசல் அருகே முதல் குண்டு வெடித்தது.
அப்போது, பராத் இரவையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் தொழுகைக்காகப் பள்ளிவாசலில் கூடியிருந்தனர். தொழுகை முடிந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோது, சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, பள்ளிவாசலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்தைப் பகுதியில் மேலும் இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த மூன்று குண்டுவெடிப்புகளும் உயர்ந்த அழுத்தம் மற்றும் உலோகத் துண்டுகளைக் கொண்டிருந்ததால், பயங்கரமான உயிரிழப்பையும் காயங்களையும் ஏற்படுத்தின.
இந்தத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர், மேலும் 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் முக்கியமாக சாத்வி பிரக்யா சிங் தாக்குர் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் புரோகித் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கில் மேலும் பலர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நீண்ட நாட்களாக நடந்து வந்த நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவ வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.
பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங், முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பைக்கில் தான் குண்டு கட்டப்பட்டு இருந்தது என்பதை NIA நிரூபிக்கவில்லை என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: கோவை குண்டுவெடிப்பு சம்பவம்... 12 பேரை விடுவிக்கும் தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!
முன்னாள் எம்பி பெயரிலான மோட்டார் சைக்கிளில் தான் குண்டு வைக்கப்பட்டதை நிரூபிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்பு நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை NIA சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கில் விசாரிக்கப்பட்ட 323 அரசு தரப்பு சாட்சிகளை 40 நபர்கள் அண்மையில் பிறழ் சாட்சி அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 17 வயது சிறுமியை வன்கொடுமை செய்த காம மிருகங்கள்... சாகும் வரை சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்