12 வருடங்களாக கல்வியை சீரழித்த பாஜக அரசு... தொடரும் போராட்டங்கள்...! மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு..!
கல்வியை மத்திய அரசு சீரழித்து விட்டதாக மல்லிகார்ஜுன கார்க்கை குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 2026ஆம் ஆண்டில் இந்தப் பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மே 3 அன்று நடைபெற்ற தேர்வில் கேள்வித் தாள் கசிவு குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதனால் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டாலும், மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பு வெடித்துள்ளது. டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஜூன் 6 முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள், இந்திய இளைஞர் எழுச்சியின் அடையாளமாக மாறியுள்ளன. 'கரப்பான் பூச்சி ஜனதா' உள்ளிட்ட இளைஞர் அமைப்புகளும், மாணவர் சங்கங்களான SFI, AISA போன்றவையும் இதில் முன்னணியில் உள்ளன.
மாணவர்கள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறைகேடுகளுக்கு உயர்மட்ட விசாரணை வேண்டும், முழுமையான சீர்திருத்தங்கள் வேண்டும் என வலியுறுத்துகின்றனர். போராட்டங்கள் டெல்லியுடன் நின்றுவிடாமல், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியுள்ளன. சில இடங்களில் போலீஸ் தடியடி, கைது நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: வெடிக்கும் நீட் போராட்டம்... ஒரு நாள் டைம் குடுங்க...! CJP கட்சியிடம் அவகாசம் கேட்ட மத்திய அரசு..!!
இந்த நிலையில், மத்திய பாஜக அரசு கல்வியை சீரழித்து விட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கை குற்றம் சாட்டியுள்ளார். மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களை பிரசாரக்கூடங்களாக மாற்றி மாணவர்களை அரசு அச்சுறுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டை முன் வைத்தார். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பணிநீக்கம் செய்துவிட்டு கல்விமுறை குறித்த ஆக்கப்பூர்வமான விவாதத்தைத் தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். மேலும் அரசு கடந்த 12 ஆண்டுகளில் கல்வி அமைப்பை சீரழித்துவிட்டதாக தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: "விஜய் மாமா"-னு சொன்னீங்களே..? அப்ரண்டிஸ்களாக மாறும் அரசு பள்ளி மாணவர்கள்... நயினார் தாக்கு..!!