×
 

ரொம்ப பேசாதீங்க அண்ணாச்சி-னு சொன்னனே.! கேட்டீங்களா..? EX. அமைச்சர் கைது... மாணிக்கம் தாகூர் விமர்சனம்..!

அனிதா ராதாகிருஷ்ணன் கைது சம்பவத்தை மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமின் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூரில் வைத்து அதிரடியாக காவல்துறை கைது செய்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சில மணி நேரங்களில் ஆத்தூரில் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். 

இதையும் படிங்க: "அரை மீசை பாரதிக்கிட்ட அப்போ பேசிக்கிறேன்..." - ஆர்.எஸ்.பாரதியை மீண்டும் சீண்டிய மாணிக்கம் தாகூர்...!

அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். இதுக்குதான் ரொம்ப பேசாதீங்க அண்ணாச்சினு அப்போவே சொன்னோம் என்றும் அதிகார மமதையில் பேசினால் இப்படிதான் ஆகும் எனவும் விமர்சித்துள்ளார். 

இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவரானதுமே களேபரம்... வாண்டடாக அன்புமணி, சீமானை வம்பிழுத்த மாணிக்கம் தாகூர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share