மக்கள் பணியில் பங்கு கேட்டால் சதியா? திமுகவை தொடர்ந்து வம்பிழுக்கும் காங்கிரஸ் M.P..!
மக்கள் பணியில் பங்கு கேட்டால் எப்படி சதியாகும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக அரசியலில் தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தில் ஆட்சியில் பங்கு என்ற பேசுபொருள் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் தொடர்ந்து திமுகவை நோக்கி கேள்விகளையும் கருத்துகளையும் வைத்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், திமுகவுடன் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, அதற்கு அப்பால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவது என பல்வேறு பேச்சுகள் எழுந்தன.
காங்கிரஸ் சார்பில் சிலர், குறிப்பாக மாணிக்கம் தாகூர், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற குரலை உயர்த்தினார். இதை திமுக தலைமை ஏற்கவில்லை.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் தெளிவாகக் கூறினார். ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது., காங்கிரஸுக்கும் இது நன்றாகத் தெரியும்., சிலர் கூட்டணியைப் பிரிக்க சதி செய்கிறார்கள்.
இது திமுகவின் உறுதியான நிலைப்பாடு. தமிழக அரசியல் வரலாற்றில் 1967 முதல் திராவிடக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், கூட்டணி ஆட்சி என்பது பொருந்தாது என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றியவர் மாணிக்கம் தாகூர் "மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை..." என்று குறிப்பிட்டார். மேலும், 2006ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 34 தொகுதிகள் வென்றும் ஆட்சியில் பங்கு கோராமல் விட்டதை தவறு என்று சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: முதலீட்டாளர்களின் நம்பிக்கை தமிழ்நாடு..! எங்கள் சாதனையை நாங்களே முறியடிப்போம்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!
அப்போது திமுகவுக்கு ஆதரவு கொடுத்து வெளியில் இருந்தது காங்கிரஸ் தவறு என்ற கருத்தை வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து ஸ்டாலின் கருத்துக்கு மீண்டும் பதிலடி கொடுத்தார் மாணிக்கம் தாகூர். "தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?" என்று கேள்வி எழுப்பினார். இது அவரது தொடர் எதிர்வினைகளில் மிக முக்கியமானது. ஆட்சியில் பங்கு கோருவது சதி அல்ல, தோழமைக்கு உரிய உரிமை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவின் அடுத்த ஊழல்... வாரி சுருட்ட பிளான்..! தின்னு கொழுத்தது போதலையா? நயினார் விளாசல்..!