Source Code யாருகிட்ட இருக்கு? EVM-ல் உள்ள சிக்கல்கள்! பார்லி-யில் காங்., அனல் வாதம்!
இவிஎம் இயந்திரங்கள் மூலம் மோசடி செய்யப்படுகின்றன என்று நான் சொல்லவில்லை. ஆனால், மக்கள் மத்தியில் அச்சம் இருக்கிறது. இவிஎம்களின் சோர்ஸ் கோடு (source code) யாரிடம் உள்ளது?” என காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி: மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான 10 மணி நேர விவாதத்தைத் தொடங்கி வைத்த காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி, தேர்தல் ஆணையத்தின் மீதே நேரடியாக கடும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
“இவிஎம் மூலம் மோசடி நடக்கிறது என்று நான் சொல்லவில்லை… ஆனால் மக்கள் மத்தியில் அப்படி ஒரு அச்சம் இருக்கிறது. இன்று வரை எனக்கு பதில் கிடைக்கவில்லை – இவிஎம்களின் சோர்ஸ் கோடு (Source Code) யாரிடம் இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பி அவையையே அதிரவைத்தார்.
“தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்து இங்கு கேள்வி எழுப்ப வேண்டிய நிலை வந்திருப்பது துரதிருஷ்டவசமானது” என்று தொடங்கிய மனீஷ் திவாரி, முதலில் செய்ய வேண்டிய சீர்திருத்தமாக தேர்தல் ஆணைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றார். “மக்களவை எதிர்க்கட்சித் தலைவரையும், இந்திய தலைமை நீதிபதியையும் தேர்வுக் குழுவில் சேர்க்க வேண்டும்” என்று பரிந்துரைத்தார்.
இதையும் படிங்க: பார்லி-யில் வீசப்போகும் 10 மணி நேர புயல்! ரூத்ரதாண்டவம் ஆடப்போகும் ராகுல்காந்தி! தேஜ எம்.பிக்கள் ஆலோசனை!
எஸ்ஐஆர் பணிகளுக்கு சட்டரீதியான எந்த நியாயமும் இல்லை என்று குற்றம் சாட்டிய அவர், “எஸ்எஸ்ஆர் நடத்துவதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக அரசு பார்லிமெண்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார். “இவிஎம் மோசடி நடக்கிறது என்று நான் சொல்லவில்லை… ஆனால் மக்கள் மத்தியில் அச்சம் இருக்கிறது. இவிஎம் சோர்ஸ் கோடு யாரிடம் இருக்கிறது என்பதற்கு இன்று வரை பதில் இல்லை” என்று மீண்டும் வெடிகுண்டை போட்டார்.
10 மணி நேரம் நடைபெறும் இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளார். எஸ்எஸ்ஆர் மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்படுவதாகவும், போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தை நேரடியாக சாட உள்ளன.
மனீஷ் திவாரியின் “சோர்ஸ் கோடு யாரிடம்?” என்ற ஒரே கேள்வி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, இவிஎம் மீதான சந்தேகத்தை மீண்டும் தலைதூக்க வைத்துள்ளது. இன்றைய விவாதம் பார்லிமெண்ட்டின் குளிர்காலக் கூட்டத் தொடரின் மிக முக்கியமான நாளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: ப்ரியங்கா காந்தியிடம் ரகசிய டீல் பேசிய அமித்ஷா!! கறார் கண்டிஷன்! சிக்கலில் சோனியா, ராகுல்காந்தி!