×
 

விஜய்க்கு மன உளைச்சல்..! ரத்தம் கொதிக்குது..! ஆதங்கத்தை கொட்டிய மன்சூர் அலிகான்..!!

விஜய்க்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் தனது ரத்தம் கொதிப்பதாகவும் மன்சூர் அலிகான் ஆதங்கத்தை கொட்டி உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பிறகு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காத சூழல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு கட்சிகளுடன் ஆதரவு பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் கூட்டணி விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பரபரப்பான சூழல் நிலவுகிறது.

நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான், விஜய்யின் நீலாங்கரை இல்லத்துக்கு அருகில் திடீரென வந்து தனது ஆவேசத்தை வெளிப்படுத்தினார். மன்சூர் அலிகான் தனது மகனுடன் விஜய் இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை என்றும், அநியாயம் நடந்து கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். விஜய்க்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் தனது ரத்தம் கொதிப்பதாகவும் ஆதங்கத்தை கொட்டினார்.

“விஜய்யை உடனே முதலமைச்சராக்குங்கள்., இல்லையென்றால் அவ்வளவுதான்” என்று கொந்தளித்தார். மக்கள் தீர்ப்பை மதிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வதை கடுமையாக விமர்சித்த அவர், இனி வரும் காலங்களில் நீதிபதிகள் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யும் முறையை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: விசிகவுக்கு பதவி ஆசையா..? சிறுமைப்படுத்துறாங்க..! MP ரவிக்குமார் விளக்கம்..!

இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.கவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து வி.சி.க உள்ளிட்ட கட்சிகளிடையே இழுபறி நிலவும் நேரத்தில், மன்சூர் அலிகானின் இந்த ஆவேசப் பேச்சு விஜய் ஆதரவாளர்களிடையே பெரும் எதிரொலியைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பத்தல பத்தல.. அடம் பிடிக்கும் திருமா... விஜய்க்கு வைத்த 4 டிமாண்ட்... தாமதத்திற்கு காரணம் இதுவா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share