×
 

மெயின் பியூஸை பிடுங்கிய இந்தியா... ஊசலாடும் பாகிஸ்தான் பொருளாதாரம்!!

பாகிஸ்தானில் பல துறைகள் கடுமையான விளைவுகளை, சரிவுகளை சந்திக்க தொடங்கி உள்ளன.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தத் தாக்குதலால் காஷ்மீரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் பல துறைகள் கடுமையான விளைவுகளை, சரிவுகளை சந்திக்க தொடங்கி உள்ளன. பாகிஸ்தான் உடன் முற்றிலுமாக வர்த்தக நடவடிக்கைகளை இந்தியா நிறுத்தி உள்ளது. அதாவது பாகிஸ்தான் உடன் இந்தியா கொண்டிருந்த அனைத்து விதமான வர்த்தக உறவும் துண்டிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் உடன் வர்த்தக நிறுத்தம் என்றால் மொத்தமாக ஏற்றுமதி நிறுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நிலத்தடி பங்கரில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு.. மீண்டும் உச்சகட்ட பதற்றம்!!

அதேபோல் இறக்குமதி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இரண்டு தரப்பிற்கும் இடையே 100% வர்த்தகம் நிறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக உரத்துறை, மருந்துவ துறை, ஆடைகள் துறை, ஸ்டீல் துறை, பர்னிச்சர் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த துறைகள் இந்திய பொருட்கள் இல்லாமல் தள்ளாட தொடங்கி உள்ளன. முக்கியமாக மருத்துவ துறை கடுமையாக தள்ளாடி வருகிறது. பாகிஸ்தானில் இருந்து 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலர் பழங்கள் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட பொருட்கள் இடைத்தரகர் நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைவதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு நேரடியாக அனுப்பப்பட்ட 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் தடை செய்யப்பட்டன. இவற்றில் கணிசமான பகுதி இப்போது மாற்று நாடுகள் வழியாக திருப்பி விடப்படுகிறது. கணிசமான அளவு பொருட்கள் மூன்றாம் நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைகின்றன. குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை வழியாக, கொண்டு வரப்பட்டன. இவையும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில வாரங்களில் மட்டும் பாகிஸ்தானுக்கு 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் பல துறைகள் கடுமையான விளைவுகளை, சரிவுகளை சந்திக்க தொடங்கி உள்ளன.

இதையும் படிங்க: விளம்பரத்துக்காக செய்றீங்களா..? பஹல்காம் தாக்குதல் குறித்து மனுதாக்கல் செய்த நபர்.. உச்ச நீதிமன்றம் வார்னிங்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share