×
 

மாஜி நக்சல்களுக்கு மாஸாக திருமணம்.. நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர்..!

மகாராஷ்டிராவில் 13 முன்னாள் நக்சல்களுக்கு பிரமாண்ட திருமணம் நடந்தது. முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தம்பதிகளை வாழ்த்தி, அவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

மகாராஷ்டிராவில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மத்திய படை மற்றும் மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசாரின் நடவடிக்கையால், நக்சலைட்கள் பலர் ஆயுதங்களை விட்டு சரண் அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில், கட்சிரோலியில் இன்று 12 நக்சலைட்கள் ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரண் அடைந்தனர். இவர்களில் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களும் அடங்குவர். அவர்கள் பற்றிய தகவல் கொடுப்போருக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், தேசத்தின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக உள்ள நக்சல் சித்தாந்தத்தை கைவிட்டு தேசிய நீரோடையில் கலக்க விரும்புவதாக சரண் அடைந்த நக்சல்கள் கூறினர். முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் நக்சல்களின் சரண் அடையும் நிகழ்வு நடந்தது. அதே சமயம், ஏற்கனவே சரண் அடைந்து நல்வழிப்பாதையில் பயணிக்கும் 13 முன்னாள் நக்சல்களுக்கு பிரமாண்ட திருமணம் நடந்தது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவை கலங்கடிக்கும் மிதி நதி ஊழல்.. பாலிவுட் நடிகர் வீடு உட்பட 15 இடங்களில் ரெய்டு..!

இதில், முதல்வர் பட்னவிஸ் தம்பதிகளை வாழ்த்தி, அவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். போலீஸ் உயர் அதிகாரிகளும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். 

இது குறித்து முதல்வர் பட்னவிஸ் கூறியதாவது: நாட்டில் நக்சல் சித்தாந்தம் வலுவிழந்து வருகிறது. கட்சிரோலியில் இன்று 12 நக்சல்கள் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைந்ததுடன், தேசிய நீரோடையில் கலக்க விரும்புவதாக கூறியுள்ளனர். அவர்களில் பலர் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களாக செயல்பட்டவர்கள்.

இதன் மூலம், நக்சல்வாதத்தின் முதுகெலும்பு உடைந்துள்ளது. மகாராஷ்டிராவின் தலைமறைவாக வசிக்கும் நக்சல்வாதிகளும் சரண் அடைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். 

அதே போல், ஏற்கனவே சரண் அடைந்த 13 நக்சல்களுக்கு இன்று திருமணம் நடந்தது. நல்வழிப்பாதையில் செல்ல விரும்பும் முன்னாள் நக்சல்களின் திருமணத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. காடுகளில் மறைந்திருந்து, ஆயுதம் ஏந்தி, இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் திருந்தி, இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். அவர்களின் வாழ்வு சிறக்க மனமார வாழ்த்துகிறேன் என்றார்.

இதையும் படிங்க: இவ்வளவு மோசமாகிட்டியே..! பாகிஸ்தான் ஜிடிபியை (GDP) ‘ஓவர்டேக்’ செய்யும் தமிழகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share