×
 

என்ன நடந்துச்சு? யார்கிட்ட வீடியோ இருக்கு? தவெக மா. செ.களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மதியழகனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரின் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசரிசிக்கு 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்தனர். கரூர் கோரச் சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை இல்லாமல் மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தில் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இவர்களின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்தனர்.

இதற்கிடையில் தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக விட்டுக் கழகத்தின் நிர்வாகி மதியழகனை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதியழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இதையும் படிங்க: தவெக நிர்வாகி மதியழகனை விசாரிக்கணும்... அனுமதி கேட்டு போலீஸ் மனு...!

தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்த விசாரிக்க அனுமதி கேட்டு சிறப்பு புலனாய்வு குழு கோரிக்கை வைத்திருந்தது. இரண்டு நாட்கள் மதியழகனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கு அனுமதி கொடுத்து கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மதியழகனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டன, சம்பவத்திற்கான காரணம், வீடியோக்கள் யாரிடம் உள்ளது என பல்வேறு தகவல்களை பெறும் வகையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: என் புருஷன் மேல சின்ன கீறல் விழுந்தாலும்... தவெக மதியழகன் மனைவி பரபரப்பு பேட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share