×
 

ரயிலில் மிடில் பெர்த்-ஆ..!! அப்போ உங்களுக்கு தான் இது..!! வெளியான முக்கிய தகவல்..!!

முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் நடுப்படுக்கையை பயன்படுத்தும் பயணிகளால் பல்வேறு பிரச்சினைகள் நிகழ்ந்து வருகிறது.

ரயில் பயணத்தின்போது நடுப்படுக்கை (மிடில் பெர்த்) பயன்படுத்தும் பயணிகளால் அடிக்கடி ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகள் பலருக்கும் தலைவலியாக மாறிவருகின்றன. குறிப்பாக, பகல் நேரங்களிலும் நடுப்படுக்கையில் படுத்து உறங்க முயல்வதால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இத்தகைய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய ரயில்வே வாரியம் ஏற்கனவே வகுத்துள்ள விதிமுறைகளை தெற்கு ரயில்வே மீண்டும் பயணிகளுக்கு நினைவூட்டியுள்ளது.

இந்திய ரயில்வேயின் தெளிவான விதிப்படி, முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதியுள்ள பெட்டிகளில் நடுப்படுக்கையை பயன்படுத்தும் பயணிகள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான 8 மணி நேரம் மட்டுமே உறங்குவதற்காக அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நேரத்திற்கு வெளியே, அதாவது பகல் நேரங்களில், நடுப்படுக்கையை படுக்கை நிலையில் வைத்திருக்காமல், இருக்கை (சீட்) வசதியாக மாற்றி, சக பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பயன்படுத்த வேண்டும்.

இந்த விதியில் சில சிறப்பு விலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோர், குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரம் படுக்கையை பயன்படுத்த விரும்பினால், ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் (டி.டி.) அனுமதி பெற்றுக் கொள்ளலாம். மேலும், கீழ் படுக்கையில் பயணம் செய்யும் சக பயணியின் முழு ஒப்புதல் இருந்தால், நேர வரம்பை சற்று நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: ஆவணங்கள் காட்டியும் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை... கதறும் மீன் வியாபாரிகள்..!!

இருப்பினும், பல பயணிகள் தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ப எந்த நேரத்திலும் நடுப்படுக்கையில் படுக்க முயல்வதால், சக பயணிகளிடையே வாக்குவாதங்கள் மற்றும் மோதல்கள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழ்நிலைகளில், உடனடியாக டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர் சம்பந்தப்பட்ட பயணிகளிடையே பேசி, பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பார்.

இதேவேளை, மேல் படுக்கை (அப்பர் பெர்த்) பயன்படுத்தும் பயணிகளுக்கு எந்த நேர வரம்பும் இல்லை. அவர்கள் எந்த நேரத்திலும் தூங்கலாம். ஆனால் நடுப்படுக்கை பயன்படுத்துபவர்கள் ரயில்வே விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.தெற்கு ரயில்வேயின் சமூக வலைதளப் பக்கங்களில் இந்த விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பயணிகளிடையே ஏற்படும் தேவையற்ற மோதல்களைத் தவிர்ப்பதும், அனைவரும் அமைதியாகவும் இனிமையாகவும் பயணம் செய்ய வேண்டும் என்பதுமே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை முறையாக அறிந்து, ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து பயணம் மேற்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த எளிய விதிகளைப் பின்பற்றினால், நீண்ட தூர ரயில் பயணங்கள் இன்னும் இனிமையான அனுபவமாக மாறும் என்பது உறுதி.

இதையும் படிங்க: மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம்! தாய்நாடு திரும்பும் மக்கள்! 4.26 லட்சம் பேர் இந்தியா திரும்பினர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share