ரத்தமும், தண்ணீரும் ஒன்னா பாய முடியாது! தீவிரவாத இலக்கை அழிப்பதே நோக்கம் - அமைச்சர் ஜெய்சங்கர்..!
ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக பாய முடியாது என கூறினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பகல்காம் தாக்குதல் தொடர்பாகவும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மக்களவையில் மத்திய அமைச்சர்கள் ராஜநாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் பகல்ஹாம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விளக்கமளித்து உள்ளனர்.
அமித் ஷா பேசுகையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களை ஒட்டுமொத்தமாக அழித்ததாக தெரிவித்தார். ஆப்ரேஷன் மகாதேவ் மூலம் பகல் காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் கூடாரங்களை அழித்ததாகவும் கூறி இருந்தார்.
இதையும் படிங்க: கேள்வி கேட்டாலே தேச விரோதி முத்திரை குத்துவீங்களா? கனிமொழி சரமாரி கேள்வி..!
மேலும், பாகிஸ்தானை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் மதிக்கவில்லை என்றும் அமித் ஷா குற்றம் சாட்டி இருந்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக ராஜ்நாத் சிங் தெளிவாக விளக்கமளித்த பின்னும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். அப்போது, ரத்தமும் தண்ணீரும் இணைந்து பாய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி இந்தியாவின் தாக்குதல் என பிரதமர் மோடி அமெரிக்காவிடம் கூறியதாகவும் தீவிரவாதத்திற்கு எதிராக போராட வேண்டும் என்பதை அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
தீவிரவாதிகளின் இலக்குகளை அழிப்பதே ஆபரேஷன் சிந்துரின் நோக்கமாக இருந்தது என்றும் இந்தியா - பாகிஸ்தானை நிறுத்தியதாக பேசிய அமெரிக்க அதிபரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தார்.
இதனிடையே, அமைச்சர் ஜெய்சங்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம். பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஆளுநர் பின்னால ஒளிஞ்சிக்கவா உள்துறை அமைச்சர்? கௌரவ் கோகாய் சரமாரி கேள்வி..!