×
 

இப்போ தெரியுதா?... தீயாய் பரவிய வீடியோவை எடுத்துக்காட்டி திமுக, அதிமுகவை அலறவிட்ட அமைச்சர் கீர்த்தனா...!

சமூக வலைத்தளங்களில் பெண் ஒருவர் மாடர்ன் உடையில் காரில் இருந்து இறங்கி செல்லும் வீடியோ வைரலாகி வந்த நிலையில், இது தொடர்பாக தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார். 

கடந்த இரு நாட்களாக சோசியல் மீடியாக்களில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கி செல்லும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன. அந்த பெண் குட்டை பாவாடை அணிந்து இருந்தது, அவர் தோற்றத்தில் தமிழக அமைச்சர் கீர்த்தனா போல இருந்ததாலும் சமூக ஊடகங்களில் அதிகம் பரவியது. தோற்றத்தில் அமைச்சர் கீர்த்தனா போல இருப்பதால், இப்படி பொதுவெளியில் இதுபோன்ற உடை அணிவதா? என்ற ரீதியில் பலரும் விமர்சித்து பதிவிட்டு இருந்ததை பார்க்க முடிந்தது

சிவகாசியில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சி மேடை ஒன்றில் அந்த வீடியோவை தொண்டர்களுக்கு போட்டு காண்பித்த அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதாவது: அதே மாதிரி இன்னைக்கு ஒரு வீடியோ போட்டிருக்காங்க. நான் ஒரே ஒரு நிமிஷம் காட்டுகிறேன். அதாவது, பொய் பிரச்சாரம் என்றால் எப்படி எல்லாம் வந்து சாதிக்கலாம் என்று நினைத்து, இப்போது தினமும் சனி, அவங்களோட வேலையே இதுதான். கீர்த்தனா அக்காவை எப்படி அடிக்கலாம் என்பதுதான் அவங்களோட வேலையே.

இன்னைக்கு நான் பொய் பிரச்சாரத்தை காட்டுகிறேன். நீங்களே சிரிப்பீங்க. யார் போட்டிருக்காங்க தெரியுமா? இது இபிஎஸ் 247 ப்ளூ டிக்கோடு வந்து போட்டிருக்காங்க.

இதையும் படிங்க: சட்டசபை நேரலையால் அழு அழுவென அழுகிறார்கள்!! அமைச்சர் கீர்த்தனா விமர்சனம்!

யாரோ ஒரு பொண்ணு இந்த மாதிரி ஒரு அரைகுறை டிரஸ் போட்டுக்கொண்டு காரில் ஏறுறாங்க. இந்த வீடியோவை எடுத்து போட்டு, “இது யார் என்று தெரிகிறதா?” என்று எதிலோ இபிஎஸ் 247 என்ற ஒரு அபிஷியல் பேஜில் போட்டிருக்காங்க.

ஒரு பெண்ணை எப்படி எல்லாம் இழிவுபடுத்த முடியுமோ, திமுகாவும் அதிமுகாவும் மாறி மாறி இப்போது இணையம் முழுவதும் இப்படித்தான் போடுறாங்க. இதை உண்மையாகவே சொல்லுங்க, இது நானா? இதைக் கொஞ்சம் பாருங்களேன். எனக்கே ஆச்சரியமாக இருக்கு. இன்னைக்கு ஃபுல்லா ஏதோ ஓடிட்டு இருக்கு.

அதாவது, இதிலேயே தெரியுது அவங்களோட இணக்கம் எவ்வளவு இணக்கமாக வேலை பார்க்கிறாங்கன்னு. திமுகவும் அதிமுகவும் எவ்வளவு இணக்கமாக வேலை பார்க்கிறாங்கன்னு இதிலேயே தெரியுது.

திமுக காரங்களும் போட்டிருக்காங்க, அதிமுக காரங்களும் போட்டிருக்காங்க. அந்த அளவுக்கு இணக்கமாக ஒன்று சேர்ந்து, எப்படியாவது இதைக் கவிழ்க்கணும், கவிழ்க்கணும்னு பார்த்துக்கிட்டு இருக்காங்க. முடியாது. இங்கே இருக்கிற மக்களுக்குத் தெரியும் எது உண்மை என்று எனக்கூறினார். 

இதையும் படிங்க: “சாபத்தை வாங்காதீங்க...” - தவெக ஸ்டைலில் அமைச்சர் கீர்த்தனாவை விளாசிய பெண் பட்டாசு தொழிலாளி... காரணம் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share