தேர்தலில் 234 தொகுதிகளும் திமுக கூட்டணிக்குதான்.. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாறுமாறு.!!
பதுங்கி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
பதுங்கி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
விழுப்புரத்தில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”அமலாக்கத் துறையின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிகார வரம்புகளை மீறி மத்திய அரசின் தூண்டுதல் பேரில், அமலாக்கத் துறை பணியாற்றி உள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. கொள்ளை புறமாக திமுக அரசு மீது வீண் பழியை சுமத்தி உள்ளனர். 2026இல் அவர்களை மக்கள் கண்டிப்பார்கள்.
முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்து அதிமுக பொது செயலாளர் பழனிசாமி பேசுவது, அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகதான். இந்தப் பயணம் பற்றி எல்லோருக்கும் தெரியும். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கான நிதி உரிமையைக் கேட்டு பெறவே செல்ல உள்ளார்.
டெல்லிக்கு சென்று, 3 கார்கள் மாறி, பதுங்கி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தவர் பழனிசாமி. புறவாசல் வழியாக சென்றவர். சட்டப்பேரவையில் பாஜகவைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் பேசினார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால்தான், தோல்வி அடைந்தேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புலம்பிய மறுவாரமே, பாஜகவுடன் கூட்டணி அமைத்தவர் பழனிசாமி.
இதையும் படிங்க: இவங்க விரும்புவதை தான் தீர்ப்பா எழுதனுமா? திமுக-வை கழுவி ஊற்றிய கிருஷ்ணசாமி!!
இவரை போல் கொள்ளை வாசல் வழியாக முதல்வர் டெல்லிக்கு செல்லவில்லை. சார், தம்பி என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோர்தான் பேசுகிறார்கள். இது முருகனுக்குதான் தெரியும். பாமக கூட்டணி என்பது எப்படி வேண்டுமானாலும் அமையும். திமுக தலைமையிலான கூட்டணி நிலையானது, கொள்கை அடிப்படையிலானது.
இக்கூட்டணி கடந்த 15 ஆண்டுகளாக தொடர்கிறது. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். நெல் மூட்டைகள் பாதுகாக்க குடோன் அமைக்கப்பட்டு வருகிறது. நிரந்திர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். வேளாண்மைத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
இதையும் படிங்க: பாஜக-வின் மற்றொரு வடிவம் தவெக; திமுக-வில் இணைந்த தவெக நிர்வாகி… பகிரங்க குற்றச்சாட்டு!!