பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சமா? எதையாவது உளறாதீங்க இபிஎஸ்! அமைச்சர் மூர்த்தி பதிலடி..!
தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் மூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் மூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி, திமுக ஆட்சியின் கீழ் பத்திரப்பதிவுத்துறையில் நடைபெறும் லஞ்சம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
திமுக ஆட்சியை அவர், கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என்று விமர்சித்தார். இதில், பத்திரப்பதிவுத்துறையில் லஞ்சம் நடைபெறுவதாக குறிப்பிட்டு, ஏதாவது நிலம் பதிவு செய்ய முயன்றால், லஞ்சம் இன்றி அது நடைபெறாது என்று கூறினார். இது 10 சதவீத லஞ்சம் என்று குறிப்பிட்டு, துறையில் ஊழல் பரவியுள்ளதாகவும், இது மக்களை பாதிக்கிறது என்றும் அவர் வாதிட்டார்.பழனிச்சாமியின் இந்தக் குற்றச்சாட்டு, திமுக ஆட்சியின் முதல் ஆண்டுகளில் இருந்து தொடர்ந்து வரும் ஒரு தொடர் விமர்சனத்தின் பகுதி.
இந்த நிலையில், பத்திர பதிவுத்துறையில் 10% லஞ்சம் பெறுவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டை இருந்ததற்கு அமைச்சர் மூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார். கணக்கு வழக்கு இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி எதையாவது பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். பத்திரப்பதிவில் எந்த தலையிடும் இருந்ததில்லை என கூறினார். அதிமுகவினர் பத்திரப்பதிவுக்கு சென்றபோது யாராவது 10 சதவீதம் வாங்கினார்களா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பாஜக இருக்கும் இடம் சர்வநாசம்! அதிமுக நாலா உடைய காரணமே அவங்கதான்... குண்டை தூக்கிப்போட்ட செல்வப் பெருந்தகை...
தமிழ்நாட்டில் உள்ள பத்திர பதிவு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து பாருங்கள் என்று கூறினார். ஒரு நாளைக்கு 27 கோடி லஞ்சம் பெறுகிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறாரா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: #BREAKING: செங்கோட்டையன் இடத்தைப் பிடித்தார் ஏ.கே செல்வராஜ்… அரசியலில் பரபரப்பு