“அதைச் சொல்ல பாஜக விஜயகாந்தின் வாரிசு இல்ல” - அமைச்சர் ரகுபதி காட்டமான பதிலடி...!!
திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்துள்ளதால் விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது என்பதை பாஜகவினர் சொல்லக்கூடாது. விஜயகாந்தின் வாரிசுகள் சொல்ல வேண்டும் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த ஐந்தாண்டுகளில் வரலாற்று சிறப்புமிக்க சட்டமன்றமன்றமாக அமைந்துள்ளது பல்வேறு புதிய அறிவிப்பு தரப்பட்டுள்ளது. இந்த சட்டமன்றம் தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்துள்ள வரப் பிரசாதம். ஏழை எளிய நடுத்தர மக்களுடைய பசிப்பிணி போக்குகின்ற அரசாக இந்த அரசு அமைந்துள்ளது. காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து உலகிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிய சட்டமன்றம் தான் இந்த சட்டமன்றம். அடுக்கிக் கொண்டே போகக்கூடிய திட்டங்களை நிறைவேற்றியுள்ள ஒரே அரசு இந்த அரசு.
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேசியதை அறிகுறியாகவும் எடுத்துக் கொள்ளலாம் திமுகவுக்கு யார் வந்தாலும் வரவேற்பார். திராவிட மாடல் ஆட்சி என்பது எம்ஜிஆர் ஜெயலலிதா பாணியில் சொல்ல வேண்டுமென்றால் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஆட்சியாகவும் இந்த ஆட்சி உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் சட்டமன்றத்திலேயே தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைய எம்ஜிஆர் ஜெயலலிதாவின் ஆசியும் உள்ளது என்று கூறியுள்ளனர்.
நயினார் நாகேந்திரன் ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டை கூறினார் என்றால் அவருக்கு பதில் சொல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச்சாட்டை சொல்வது தவறு ஆதாரபூர்வமாக குற்றச்சாட்டை வைத்தால் அதற்கு பதில் நிச்சயம் இருக்கும் நாங்கள் எப்போதும் ஆதிதிராவிட மக்களுக்கு கொடுத்த நிதியை நாங்கள் எடுப்பதில்லை நாங்கள் கையில் இருக்கும் நிதியை தான் அந்த மக்களுக்கு கொடுக்கின்றோம். அந்த நிதியில் கை வைக்கின்ற ஆட்சி எங்கள் ஆட்சி இல்லை.
இதையும் படிங்க: AI மாநாட்டில் அத்துமீறல்..! ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அவமானம்..!! இளைஞர் காங்கிரஸுக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!
திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்துள்ளதால் விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது என்பதை பாஜகவினர் சொல்லக்கூடாது விஜயகாந்தின் வாரிசுகள் சொல்ல வேண்டும். பாஜக விஜயகாந்தின் வாரிசு அல்ல. பாஜக விஜயகாந்துக்கு எதுவும் செய்யவில்லை. 2016ல் விஜயகாந்த் இருக்கும்போது தேமுதிக திமுகவுக்கு வர வேண்டிய சூழல் இருந்தது ஆனால் அதை மடை மாற்றி விட்டார்கள் அதுதான் அன்றுள்ள நிலவரம்.
அதை இன்றைக்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் நிறைவேற்றி இருக்கிறார். நிச்சயமாக இந்த கூட்டணியை விஜயகாந்த் ஆத்மா கூட்டணியை வாழ்த்தும் வரவேற்கும் இது தமிழ்நாடு மக்களுக்கு தேவையான கூட்டணி.
எங்கள் கூட்டணியில் உள்ள யாருக்கும் நாங்கள் செக் வைக்க மாட்டோம். எங்களைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் உள்ள அனைவரையும் அரவணைத்து இந்தியாவிலேயே முன்மாதிரியான கூட்டணி வைத்துள்ள தலைவர் எங்கள் தலைவர். எங்களை விட்டு யாரையும் பிரியவிடாமல் அனைவரையும் அரவணைத்து எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தோழமைக் கட்சிகள் என்று எண்ணி மரியாதை மதிப்பு தருகிற ஒரே அரசியல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பி.எஸ்..! ஒரே வரியில் பதிலடி கொடுத்த நயினார் ..!