×
 

செமஸ்டர் தேர்வுகள் எப்போது? - கல்லூரி மாணவர்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட மாட்டாது என தஞ்சையில் உயர் கல்வித்துறை  அமைச்சர்  கோவி. செழியன் தெரிவித்தார்.

தஞ்சையில்  மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் சிரமமின்றி பயணம் செய்திட  5 கோடி ரூபாய் மதிப்பிலான  5 புதிய சொகுசு தாழ்தளப் பேருந்துகளின்  சேவையை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்  நிகழ்ச்சியில் தஞ்சை எம்.பி முரசொலி,  திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன்,  மேயர் ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

பின்னர் அமைச்சர்  செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டியில், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியால் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது . மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர்  அவரது வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஏராளமான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல்.. இந்திய தொழிலதிபர்களின் விசாக்கள் ரத்து..!!

 மாற்றுத் திறனாளிகள் பஸ்களில் ஏறி, இறங்க சிரமப்படுவதை உணர்ந்து தாழ்தள பேருந்து சேவையை அதிகப்படுத்தி உள்ளார். இந்த தாழ்தள பேருந்துகளில்  மாற்றுத்திறனாளிகள் எளிதாக, ஏறவும் இறங்கவும் முடியும் . மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி முதியவர்கள், பெண்களுக்கும் இந்த பஸ்கள் எளிய முறையில் இருக்கும். அனைத்து விதமான சிறப்பு அம்சங்களும் இந்த பஸ்கள் கொண்டது. 

கல்லூரி செமஸ்டர் தேர்வு என்பது பல்கலைக்கழகத்தால் வரையறுக்கப்பட்ட விஷயம். இதனைத் தேர்தல் ஆணையம் நன்கு அறியும். எனவே விடுப்பு காலங்களில் தான் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்றார்

இதையும் படிங்க: வயநாட்டில் குவியும் காங்கிரஸ் தலைவர்கள்!! பிரியங்காவை தொடர்ந்து ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆஜர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share