“ஜோசப் விஜய் பெயரைக் கேட்டாலே...” - எதிர்க்கட்சிகளை எச்சரித்த செங்கோட்டையன்... இபிஎஸுக்கு சொன்ன மறைமுக மெசெஜ்...!
பாவம் அவர் மிஸ் செய்துவிட்டார் என செங்கோட்டையன் மறைமுகமாக கலாய்ப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழாவையொட்டி ஈரோடு மாவட்டம்
கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: ஜோசப் விஜய் முதலமைச்சர் பெயரை சொன்னாலே எல்லோருக்கும் அச்சம், நடுங்கி கொண்டிருக்கின்றனர். செங்கோட்டையன் எங்கே செல்கிறார் என்று எல்லோரும் கேலி பேசினார்கள். எம்ஜிஆர்.ரோடு பயணம் மேற்கொண்டேன் அவர் ஆட்சியில் அமர்ந்தார். ஜெயலலிதாவுடன் பயணம் செய்தேன் அவரும் ஆட்சியில் அமர்ந்தார், இன்று விஜயுடன் பயணம் செய்கின்றேன் அவரும் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அனைவரின் உள்ளங்களிலும் வாழக்கூடிய தலைவராக விஜய் இருக்கின்றார் அவரின் தொலைநோக்கு சிந்தனை ஒவ்வொரு திட்டங்களையும் தினமும் அறிவித்துக் கொண்டிருக்கின்றார் .
நிதி நிலை நெருக்கடியாக இருக்கின்றது. எனினும் அவர் அறிவித்த திட்டங்களை படிப்படியாக நிறைவேற்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார் காலை 10 மணிக்கு கோட்டைக்கு வந்தால் மாலை வரை மக்களை சந்திப்பது, திட்டங்களை நிறைவேற்றுவது என்ற சிந்தனையில் இருக்கிறார்.
இதையும் படிங்க: "ஹெட்லைன் நியூஸ்" ஆகுறதுக்காக-லாம் பேசக்கூடாது.! பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுரை..!!
பெரியார் கொள்கைகளில் கடவுள் இல்லை என்பதை தவிர மற்ற அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக துணிவோடு முதலமைச்சர் கூறியிருக்கிறார். கோபிசெட்டிபாளையத்தில் 7000 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்படும், வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தை பிரித்து கோபிசெட்டிபாளையத்தை தலைமிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவோம். முதலமைச்சரிடம் இந்த கோரிக்கையை தெரிவித்து நிறைவேற்றுவேன் என்றார்.
இந்த உரையின் போது தான் பயணித்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல விஜயும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார் என செங்கோட்டையன் பேசியது, தன்னை அதிமுகவில் வைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமியும் இந்த முறை ஆட்சியைப் பிடித்திருப்பார். பாவம் அவர் மிஸ் செய்துவிட்டார் என செங்கோட்டையன் மறைமுகமாக கலாய்ப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மேகதாது உரிமை மீறல் பிரச்சனை..! பேரவையில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்..!! அதிமுகவினர் வெளிநடப்பு..!!