களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... நெல்லைக்குப் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்...!
கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நெல்லை புறப்பட்டார்.
உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் பல கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களும் ஆர்வத்துடன் எதிர்நோக்கும் ஒரு மாபெரும் கொண்டாட்டமே கிறிஸ்துமஸ் பண்டிகை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் இப்பண்டிகை, ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் இது வியாழக்கிழமை அன்று வருகிறது. இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கோலாகலமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் திமுக சார்பில் நெல்லையில் இன்று மாலை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
நெல்லை டக்கரம்மாள் புரத்தில் திமுக சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து அவர் நெல்லைக்கு புறப்பட்டு சென்றார். விமான மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை செல்ல உள்ளார். கிறிஸ்துமஸ் பெரு விழாவில் பங்கேற்பது மட்டும் இல்லாமல் பொருநை அருங்காட்சியகத்தையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
பொருநை அருங்காட்சியகம் தமிழகத்தின் தொன்மையான நாகரிகத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு முக்கியமான அடையாளமாக உருவெடுத்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் பண்டைய பெயரான பொருநை எனும் பெயரில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட்டியார்பட்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வளாகம், தமிழர்களின் ஆதி நாகரிகத்தின் தொட்டிலாகக் கருதப்படும் பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தைப் பிரதிபலிக்கிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை பயணம்: 65 கோடியில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா!
இங்கு காட்சிப்படுத்தப்படும் தொல்பொருள்கள் தமிழர்களின் செழுமையான வாழ்க்கை முறையை விவரிக்கின்றன. வெண்கலப் பாத்திரங்கள், இரும்பு ஆயுதங்கள், சிகப்பு-கருப்பு பானைகள், அரிய மணிகள், தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், செம்பு - இரும்பு மோதிரங்கள், வளையல்கள், அரவைக் கற்கள் போன்றவை அன்றைய தொழில்நுட்பம், வாணிபம், கலை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகின்றன.
இதையும் படிங்க: மேம்பாலத்தில் திடீர் விபத்து… வேன் கவிழ்ந்து 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம்!