×
 

ராகுலுக்கு எத்தன தடவ சொல்றது? நீங்கலாச்சு பொறுப்பா நடந்துக்கங்க ஸ்டாலின்... நயினார் விமர்சனம்

முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி வாக்குத்தரட்டு தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார். இதை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்தை பாஜக வாக்குத் திருடும் மோசடி இயந்திரமாக பயன்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். 

இந்த நிலையில், இவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்தார். இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே, ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, உண்மைக்கு புறம்பானவை மற்றும் நம்பகமான ஆதாரங்களால் ஆதரிக்கப்படாதவை என்பதை தெளிவுபடுத்தி இருப்பதாக தெரிவித்தார். 

உண்மையில், ராகுல்காந்தி சமர்ப்பித்த ஆவணம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட ஆவணம் அல்ல என்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: உலக யானைகள் தினமாம்! முதலமைச்சர் சொன்ன முக்கிய தகவல் என்ன தெரியுமா?

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, இரண்டு முறை அல்ல, ஒரு முறை வாக்களித்ததாக சகுன் ராணி என்பவர் கூறி இருப்பதையும் நைனார் நாகேந்திரன் சுட்டிக்காட்டினார்.

மகாதேவபுராவில் மட்டுமல்ல, பெங்களூரு மத்தியப் பகுதியில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்தபோது, வாக்கு திருட்டு குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றதாகிவிடும் என்றும் கூறினார்.

நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதிலும், திரு. ராகுல் காந்தி ஏ.வி.எல்., உறுதியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க மீண்டும் மீண்டும் தாமதப்படுத்தி வருவதாகவும் ஒரு அரசியலமைப்பு அமைப்பை அவமதித்து, அரசியல் லாபத்திற்காக புதிய 'டைம்-பாஸ்' கதையைச் சுழற்றுவது காங்கிரஸ் கட்சியின் நோக்கத்தை தெளிவாக அம்பலப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

தேர்தல் ஆணையத்தை வாக்கெடுப்பு மோசடி இயந்திரம் என்று முத்திரை குத்துவது ஒவ்வொரு நேர்மையான தேர்தல் அதிகாரியையும் அவமதிப்பது மட்டுமல்ல., அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிப்பதாகும் என்றும் ஒரு முதலமைச்சராக ஸ்டாலின் அதிக பொறுப்புடனும் அக்கறையுடனும் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: தாயுமானவர் திட்டம்: இந்தியாவுக்கே முன் மாதிரி முயற்சி... ரேஷன் கடை ஊழியர்களுக்கு மு.க.ஸ்டாலின் வைத்த நேரடி கோரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share