மெட்ரோவை வைத்து அரசியல்… நல்லா இருக்கு முதல்வரே… அண்ணாமலை கடும் விமர்சனம்…!
மெட்ரோவை வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் செய்வதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்தது. மெட்ரோ ரயில் திட்டங்களை நிச்சயம் செயல்படுத்துவோம் என்றும் அதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமரை சந்திக்கவும் தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்தியாவின் வளர்ச்சி என்ற கூறியுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
அதற்கு துணை நிற்க உள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி வழங்க பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி கொண்டார். அதற்காக பிரதமர் மோடியை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிப்பட கூறினார்.
இந்த நிலையில், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்வதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போது முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து இருக்கலாமே என்றும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு, மூன்று முறை தமிழகத்துக்கு வந்த போது முதல்வர் ஸ்டாலின் பார்க்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: "கொஞ்சம் கண்ணும் கருத்துமா பாருங்க அண்ணா..." - பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்...!
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தமிழகத்துக்கு நிதி தரவில்லை என கனிமொழி பேசுகிறார் என்று தெரியவில்லை எனவும் அண்ணாமலை தெரிவித்தார். இந்தியாவில் எந்த மாநிலம் மெட்ரோவிற்கும் வழங்காத நிதியை சென்னை மெட்ரோவுக்கு மத்திய அரசு வழங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ரூ.309 கோடியை ஏப்பம் விட்ட திமுக... ஸ்டாலினின் மறுபக்கத்தை விவசாயிகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய அண்ணாமலை...!