தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்..! முடிவுற்ற திட்டங்களும் தொடங்கி வைப்பு..!
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
என்.எஸ்.கிருஷ்ணனின் சிலை சென்னை தியாகராய நகரில் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்திருந்தது. ஆனால், அவரது குடும்பத்தினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, 2025 ஜூன் மாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அதை கலைவாணர் அரங்க வளாகத்திற்கு மாற்றி அமைக்க உத்தரவிட்டிருந்தார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் புதுப்பிக்கப்பட்ட முழு உருவச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்திருந்தார்.
அவரது திருவுருவப்படத்திற்கும் மலர் தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதன்பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் பயன்பாட்டுக்காக வாகனங்களையும் வழங்கினார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 86.04 கோடி ரூபாயில் 63 திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் 635.30 கோடி ரூபாயில் முடிவுற்ற 22 திட்டப்பணிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 335.62 கோடி மதிப்பிலான எட்டு புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிங்க: ரூ.21.50 கோடியில் அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!
குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் 932 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். சென்னை குடிநீர் வாரிய அலுவலக பயன்பாட்டுக்காக 47 லட்ச ரூபாய் மதிப்பிலான ஐந்து வாகனங்களை பயன்பாட்டுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இதையும் படிங்க: ஆண்டுதோறும் கட்டண கொள்ளை... வாட்டி வதைக்கும் வசூல் வேட்டை..! TTV தினகரன் காட்டம்..!