முதல்வர் பங்கேற்கும் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" மாநாடு..! பிரம்மாண்ட ஏற்பாடுகள்..!
திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மாநாட்டுக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
திமுகவின் "என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி" என்ற பெயரில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து கட்சியின் அடித்தளத்தை மிகவும் வலுப்படுத்தும் நோக்கத்தில் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சென்னை - விழுப்புரம் மண்டலத்தை உள்ளடக்கிய பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு. இதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல தொகுதிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள், குழு உறுப்பினர்கள் மிகுந்த எண்ணிக்கையில் பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாடு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவிடந்தை என்ற இடத்தில் இன்று மாலை நான்கு மணியளவில் தொடங்க உள்ளது. சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலத்தைச் சேர்ந்த 49 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து சுமார் ஒரு லட்சத்து எழுபதாயிரம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி நிலை முகவர்கள், டிஜிட்டல் முகவர்கள், இளைஞரணி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் உள்ளவர்கள் இந்த மாநாட்டின் மூலம் தேர்தல் பணிகளுக்குத் தயாரிக்கப்பட உள்ளனர். இதற்காக பத்து லட்சம் சதுர அடி பரப்பளவில் மிகப் பிரமாண்டமான திடல் தயார் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக தனித்தனி அமர்வு இடங்கள், குடிநீர், சிற்றுண்டி, கழிவறைகள், மினி கிளினிக் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: “வாங்க... வாங்க... வாழைப்பழம் இந்தாங்க...” - பாஜக பாணியை கையில் எடுத்த திமுக... திக்குமுக்காடிய மக்கள்...!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று எழுச்சி உரையாற்ற இருக்கிறார். தேர்தல் வியூகங்கள், களத்தில் எப்படி பணியாற்ற வேண்டும், வாக்குச்சாவடி மட்டத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து பிப்.14ம் தேதி திருப்பத்தூரில், 21ம் தேதி மதுரையில், 27ம் தேதி கோவையில் அடுத்தடுத்து வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடுகள் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: கொடுமை..! மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறை... திமுகவை கண்டித்த சீமான்..!