×
 

வெச்ச குறி தப்பாது..! 2026-ல நம்ப தான்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் திமுக நிர்வாகிகள் உடன் ஒன் டு ஒன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2025-ஆம் ஆண்டில் கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன. கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த முயற்சிகளின் முக்கிய பகுதியாக, அவர் திமுக நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இதனிடையே, தமிழ்நாட்டு மக்களை ஒரு பொது இலக்கை நோக்கி ஒன்றிணைத்து, மாநிலத்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்துவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாக உத்தியைக் குறிக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடத்தி வரும் ஆலோசனைகள் இந்த “ஓரணியில் தமிழ்நாடு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன.

இதனிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகளைப் பிரித்து, தொகுதி வாரியாக பிரச்சினைகளையும் தேவைகளையும் ஆய்வு செய்து வருகிறார். இந்தக் கூட்டங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், திமுகவின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், மக்களின் குறைகளைத் தீர்க்கவும் நடத்தப்படுகின்றன. 

உடன்பிறப்பே வா என்ற தலைப்புடன் நிர்வாகிகளுடன் நடக்கும் ஒன் டூ ஒன் ஆலோசனையில் தொகுதி பிரச்னைகள், தேர்தல் முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று பெருந்துறை, கோபிச்செட்டிப்பாளையம், குன்னூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளோடு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இதையும் படிங்க: இந்த ஆண்டுக்குள் 3500 கோவில்களில் குடமுழுக்கு.. இது தான் திராவிட மாடல்! மார்தட்டிக் கொள்ளும் சேகர்பாபு!

இதையும் படிங்க: ஊர் சேர்ந்தா தான் தேர் இழுக்க முடியும்! ஒற்றுமையோடு செயல்பட திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share