×
 

அவங்களுக்கு ஹிந்தி தான் முக்கியம்! இந்தியாவில் அதிகாரக் குவிப்பு… முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

மத்திய அரசு ஹிந்தியை திணிப்பதிலேயே கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வி நிதி, இயற்கை பேரிடர் ஒரு லிட்டர் பல்வேறு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லாத இடங்களில் வஞ்சிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் மத்திய மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், மத்திய அரசின் நெருக்கடிகளுக்கு மத்தியில் திமுக அரசு செயல்படும் விதம் தொடர்பாக பேருரை வழங்கினார். மேலும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்தார்.

பெண்ணுரிமை, சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக முதல் இடத்தில் இருப்பதாக தெரிவித்தார். எல்லோரும் சமம் என்ற சமத்துவத்தின் அடிப்படையில் கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் என்பதை சமூக நீதி என்றும் இந்தியாவில் அதிகார குவிப்பு நடந்து வருவதாக சர்க்காரியா கமிஷன் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

பல முற்போக்கான சட்டங்களையும், திட்டங்களையும் தமிழகத்தில் நிறைவேற்றி இருப்பதாகவும், மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் கட்சிகளுடன் திமுகவும் சேர்ந்து கண்டித்ததாக குறிப்பிட்டார். மத்திய அரசு, மாநில அரசுகளுடன் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக நடந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். 

இதையும் படிங்க: எப்படிப்பட்ட குறுகிய மனசு! நிதி பங்கேடு விவகாரத்தில் மத்திய அரசை விளாசிய முதல்வர் ஸ்டாலின்..!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும், மத்திய அரசு ஹிந்தியை திணிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும், ஆளுநர் நியமனம் தொடர்பான நியாயமான ஆலோசனையில் கூட மத்திய அரசு இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறினார்.

இதையும் படிங்க: சென்னை வெறும் ஊரல்ல... தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share